உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு டாக்டர்கள் 50 பேர் ராஜினாமா; மம்தாவுக்கு அதிகரிக்கும் தலைவலி

அரசு டாக்டர்கள் 50 பேர் ராஜினாமா; மம்தாவுக்கு அதிகரிக்கும் தலைவலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர். மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, இளம் மருத்துவர்கள் சிலர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கி உள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று 50 மூத்த மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.இந்த மருத்துவமனையில் பல்வேறு துறைகளின் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது.இது குறித்து மூத்த மருத்துவர்கள் கூறியதாவது:ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த நாங்கள் 50 பேர், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம்.மருத்துவர்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில், மூத்த மருத்துவர்களாகிய நாங்கள் 50 பேரும் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம். உயிரிழந்த அந்த இளம் மருத்துவருக்காக எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.போராட்டம் நடத்தும் இளம் மருத்துவர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தும் பிரச்சினைகளை தீர்க்க, உரிய அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.இந்த நிலையில், நாங்கள் ஒற்றுமையாக நிற்போம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Lion Drsekar
அக் 09, 2024 20:08

தலைவலி என்பது ஜனநாயகத்துக்கு மட்டுமே.குடும்பமே இல்லையென்றாலும் ஒரு குடும்பத்தை உருவாக்கி மக்களுக்காக சேவை செய்வோம் வந்தே மாதரம்


Sivagiri
அக் 08, 2024 22:39

இன்னமும் உண்மையான குற்றவாளிகள் பிடிக்காமல் , ஒரு நபரை மட்டும் செட்டப் செய்து பலிகடா ஆக்கியிருப்பது , ஆதாரங்களை திட்டமிட்டு அழிக்கப்பட்டது - உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு ,


Sudha
அக் 08, 2024 22:33

As I have been telling, sonebof these strikers are involved in the case. CBI has warned them to resign and get lost. Otherwise when CBI has completed the enwuiwgat else these people are asking against Mamta? Are they driven by foreign forces?


Ramesh Sargam
அக் 08, 2024 21:00

மம்தாவுக்கு அதிகரிக்கும் தலைவலிக்கு மருந்து கொடுக்கக்கூட டாக்டர்கள் வரமாட்டார்கள் போல தெரியுது. அட நீங்க ஒன்னு, மம்தாவுக்கு தலைவலி கொடுப்பதே அவர்கள்தான். அவர்கள் எப்படி மருந்து கொடுப்பார்கள்.


பாமரன்
அக் 08, 2024 20:27

இவனுவ செஞ்சதை தீர விசாரிச்சா... அரசு கல்லூரியில் முதுகலை படிச்சிட்டு கட்டாயத்தின் பேரில் கவர்ன்மென்ட் சர்வீஸ் பண்றவனுகளா இருப்பானுவ... நீதி கிடைக்கும் வரை ஸ்டெத்தை கையில் எடுக்க மாட்டோம்னு சொல்லட்டும் பார்க்கலாம்... வெளியே கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கிற கும்பலாகத்தான் இருக்கும் இதுகள்.. ராஜினாமாவுடன் சேர்த்து லைசன்ஸையும் சரண்டர் பண்ண சொல்லி அரசு இவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பனும்..


M Ramachandran
அக் 08, 2024 19:56

ராஜினாமாவா? அட்டரா சக்கை. வங்காள தேசாகாரர்களுக்கு மமதா வின் ஆசியுடன் வேலை நிச்சயம்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 08, 2024 19:00

பிரச்னை சீரியசாகப் போயிட்டிருக்கு ......


raja
அக் 08, 2024 18:29

இது மருத்துவ துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளுக்கும் சென்று மாநில நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தால் தான் மாமதையின் ஆணவத்தை அடக்க முடியும்...


GMM
அக் 08, 2024 17:48

உச்ச நீதி மன்றம் தானே முன்வந்து விசாரித்து கண்ட முடிவு என்ன? இது போல் நாடு முழுவதும் டாக்டர்கள் ராஜினாமா செய்தால் நிலமை படு மோசம் ஆகும். உச்ச நீதிமன்றம் வங்க மம்தா மமதையை அடக்க, ஆட்சி முடக்கு ஒரு வழி. மம்தா தானே ராஜினாமா செய்ய முடியும். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். ஆளும் மத்திய பிஜேபி நடவடிக்கை எடுத்தால் அரசியலாக மாறும். எந்த தலைவலியும் மம்தா தாங்க கூடியவர். .


சமீபத்திய செய்தி