உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 56 மணிநேர போராட்டம் வீண்; 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

56 மணிநேர போராட்டம் வீண்; 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தவுசா: ராஜஸ்தானில் 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 56 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் கடந்த டிச.,09ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன், அருகே இருந்த 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இதனைப் பார்த்து பதறி போன பெற்றோர், மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.9ம் தேதி இரவு முதல் சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். குழாய் மூலம் ஆக்சிஜன் கொடுத்து சிறுவனுக்கு சுவாசம் கொடுத்து வந்தனர். அதேவேளையில், ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டி சிறுவனை மீட்க முயன்றனர். அப்போது, சிறுவன் மீது மண் சரிந்து விழுந்தது. சுமார் 56 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, கயிறு மூலம் சுயநினைவில்லாத நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன், 56 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டும், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nandakumar Naidu.
டிச 12, 2024 18:30

ஆழ்துளை கிணற்றின் உரிமையாளருக்கு கிணற்றின் மேல் பகுதியை மூடாமல் வைத்த குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். அவரின் பொறுப்பற்ற செயலுக்காக. நம் நாட்டில் இது போன்ற விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன.


Krishnamurthy Venkatesan
டிச 12, 2024 13:38

செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இருப்பதனால் ஒரு பயனும் இல்லை.


visu
டிச 12, 2024 12:26

30 அடிக்கு கீழ் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டது இல்லை முடிவு எடுக்க முடியாமல் முயற்சி செய்கிறார்கள் இதை தடுப்பதுதான் வழியே தவிர காப்பற்றுவது அல்ல சட்டம் போடுவதோடு அரசின் கடமை முடிந்ததாக நடக்கிறார்கள் எந்த அரசு ஊழியரும் அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை அல்லது முயலுவதில்லை


Azar Mufeen
டிச 12, 2024 11:11

மார்தட்டுங்கள் இறைவன் கருணை உள்ளவன் என்றும், மிகப்பெரியவன் என்றும், விழி இருந்தும் பார்ப்பதில்லையோ, செவி இருந்தும் கேட்பதில்லையோ.. அனைத்தையும் அறிந்த இறைவனே ஒரு கொலை நடப்பது உனக்கு தெரியும் என்றால் நீதானே முதல் குற்றவாளி, பாவி எல்லாம்,பாவியே நம்ம பாவங்களை மன்னிக்கின்றாணாம் வேடிக்கையாக இருக்கிறது


Raj
டிச 12, 2024 09:31

இது போல எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது, இன்னும் பெற்றோரின் கவனக்குறைவு அல்ல அலட்சியம் தான்.


அப்பாவி
டிச 12, 2024 08:46

இந்தப் பையனைக் காப்பாத்த ஆன செலவுக்கு ஒரு நுய்று ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி போட்டிருக்கலாம். புரதான் ம்ந்திரி மன்க்கீ பாத்தில் இதைச் சொல்லி மெடல் குத்திக்கிட்டப்ப்ய்றம் ஒரு 1000 கோடி ஒதுக்கி பி.எம்.க்.கி சிசு ரக்ஷன யோஜனா கொண்டாரணும் போலுருக்கு.


N Sasikumar Yadhav
டிச 12, 2024 09:41

திருட்டு திராவிட கொத்தடிமைக்கு இந்தளவுக்கு இன்டி தெரியுமா அடடே


visu
டிச 12, 2024 12:22

இதுவாது பரவாயில்லை


Arul. K
டிச 12, 2024 08:31

இது முதல் முறையல்ல. ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பில்லாமல் வைத்திருந்தவருக்கு, மேலும் இதுபோல வைத்திருப்பவருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தண்டனை கொடுக்கவேண்டும். தண்டனையாக, இவர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆழ்துளை கிணற்றை ஆய்ந்து நிழற்படத்துடன் அறிக்கை கொடுக்க சொல்லவேண்டும்


சமீபத்திய செய்தி