உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பரிதவித்த 57 பேர்; பத்திரமாக மீட்டது கடலோரக் காவல் படை!

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பரிதவித்த 57 பேர்; பத்திரமாக மீட்டது கடலோரக் காவல் படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லட்சத்தீவு கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் படகில் சிக்கித் தவித்த 57 பேரை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.ஜனவரி 14ம் தேதி நள்ளிரவு 12:15 மணியளவில் கவரட்டியில் இருந்து சுஹேலிபர் தீவுக்கு, மூன்று பணியாளர்கள், பயணிகள் 54 பேர் என மொத்தம் 57 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படகு சென்று சேரவில்லை. படகு பழுதானதால், உரிய இடம் செல்ல முடியாமல் நடுக்கடலில் தவித்தனர்.இந்த நிலையில், கடலோர காவல்படைக்கு லட்சத்தீவு நிர்வாகத்திடம் இருந்து மொத்தம் 57 பேர் இருந்த படகு காணாமல் போனதாக ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. கடலோர காவல்படை குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் பழுதான படகில் இருந்த 57 பேரையும் பத்திரமாக மீட்டனர்.மீட்கப்பட்ட பயணிகளில் 22 பெண்கள், 9 ஆண்கள், 3 கைக்குழந்தைகள் மற்றும் 20 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடலில் உள்ள சுஹெலிபார் தீவு அருகே சென்றபோது படகு பழுதானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
ஜன 16, 2025 10:19

பாகிஸ்தான் படகாக இருந்தால் கூட உதவி என்று கேட்டால் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. பிறகு அரசியல் ரீதியாய் நடவடிக்கை தொடங்கும். தத்தளித்த படகை காப்பாற்றியவர்கள பாராட்டுக்குரியவர்கள். இதற்குரிய பரிசை ஆண்டவன் வழங்குவான் .


Barakat Ali
ஜன 16, 2025 08:44

சிறப்பு ... யார், என்ன நோக்கத்துக்காக எங்கே புறப்பட்டார்கள் என்று விசாரித்திருப்பார்கள் .....


vns
ஜன 16, 2025 07:20

பரிதவித்த மனிதர்களை மீட்பது நல்ல காரியம் தான். ஆனால் அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது. மிகக் கொடிய தீவிரவாதிகள் இதுபோன்ற பரிதவித்த மனிதர்களாக நடிக்கிறார்கள்.


Sureshkumar
ஜன 16, 2025 08:56

அனைவரும் நம் நாட்டு சுற்றுலா பயணிகளாக இருக்கலாம், செய்தியில் குறிப்பிடவில்லை. அதுற்குள் ஏன் தீவ்ர வாதிகள் என்று முடிவு செய்யவேண்டும், விசாரணைக்கு பிறகு யார் அவர்கள் என்று தெரியலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை