உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் ஆற்றில் மூழ்கி குழந்தைகள் 6 பேர் பரிதாப பலி!

மஹா.,வில் ஆற்றில் மூழ்கி குழந்தைகள் 6 பேர் பரிதாப பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நீரில் மூழ்கி குழந்தைகள் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் இந்திராவதி ஆறு உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த குழந்தைகள் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குழந்தைகள் ஆறு பேர் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீரில் மூழ்கிய குழந்தைகள் ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்பு படையினர் மீட்டனர். இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆற்றில் குளித்த குழந்தைகளுக்கு நீச்சல் தெரியவில்லை. ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் ஆறு பேர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.இதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஆறு பேர் உயிரிழந்த இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balaji Venkataraman
ஜூன் 08, 2025 21:25

இறந்த அனைவரும் பதின்ம வயதினர்.


Nada Rajan
ஜூன் 08, 2025 19:11

பெற்றோரைக் குற்றம் சொல்லியும் ஒன்னும் செய்ய முடியாது.அப்பா அம்மா பேச்சை இந்த காலத்து குழந்தைகள் எங்கே கேக்கறாங்க... அவங்க இஷ்டத்துக்கு ஆடறதுனால தான் இப்படி குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் எல்லாம் நிகழ்கிறது...


Nada Rajan
ஜூன் 08, 2025 19:10

இது எல்லாம் பெற்றோர்கள் கண்டிப்புடன் வளர்த்தால் இது போல் சம்பவம் நிகழாது.... குழந்தைகள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.


Padmasridharan
ஜூன் 08, 2025 19:04

11 வயது முதல் 19 வயது வரையுள்ளவர்கள் எந்தவிதத்தில் குழந்தைகள் ஆவார்கள் அய்யா.. தெலுங்கானாவில் / மஹாராஷ்டிராவில் அப்படி அழைக்கிறார்களா?


Balaji Venkataraman
ஜூன் 08, 2025 21:26

இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கோதாவரி ஆற்றிலும் நடந்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை