மேலும் செய்திகள்
போதைப்பொருள் கடத்தல் வெளிநாட்டு கும்பலுக்கு வலை
30-May-2025
சண்டிகர்:அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, 6.15 கிலோ ஹெராயின், ஒரு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் 10,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ள லவ்பிரீத் சிங் என்ற லவ் மற்றும் பல்விந்தர் சிங் என்கிற பாபி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6.15 கிலோ ஹெராயின், ஒரு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் 10,000 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இருவரும், பாகிஸ்தான் கடத்தல் கும்பலுடன், 'வாட்ஸாப்'பில் தொடர்பில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவர் மீதும், அமிர்தசரஸ் லோபோக் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
30-May-2025