உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60 கி.மீ. ‛‛சேஸிங் மோசடி மன்னனை அலேக்காக தூக்கிய போலீஸ்

60 கி.மீ. ‛‛சேஸிங் மோசடி மன்னனை அலேக்காக தூக்கிய போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜாமினில் வெளிவர முடியாத நான்கு கைது வாரண்ட்டில் தேடப்பட்டு வந்த பிரபல ரியல் எஸ்டேட் மோசடி மன்னன் சஞ்சீவ் ஜெயினை டில்லி போலீசார் சினிமா பாணியில் 60 கி.மீ. துரத்தி சென்று கைது செய்தனர்.அரியானா மாநிலம் குர்கானை சேர்ந்தவர் சஞ்சீவ் ஜெயின் இவர் பார்சவ்நாத் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி 13 மாநிலங்களில் 37 நகரங்களில் கிளைகளை அமைத்து அதன் சி.ஐ.ஓ.வாக இருந்தார். இதில் ரூ. பல கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.தேசிய நுகர்வேர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். தொடர்ந்து அவருக்கு எதிராக 4 கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார்.சாஹத்ரா போலீஸ் நிலைய சிறப்பு தனிப்படை போலீசார் வழக்குப்பதிந்து அரியானாவில் குர்கானில் அவரது இல்லத்திற்கு தேடி சென்றனர்.அப்போது வெளிநாடு தப்பியோட திட்டமிட்டு டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நோக்கி காரில் தப்பிசெல்ல முயன்றார் . அவரை சிறப்பு தனிப்படை போலீசார் சினிமா பாணியில் 60 கி.மீ. துரத்தி சென்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. நாளை (ஆக.05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஆக 05, 2024 09:54

எதுக்கு தூக்குறீங்க. போட்டுத் தள்ளிட்டு போக வேண்டியது தானே. நம்ம உளுத்துப்.போன சட்டங்களை உடைச்சு நிரபராதியா வெளியே வந்துருவானே


subramanian
ஆக 05, 2024 14:32

அதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் நடக்கும். இப்போது சட்டத்தை சரி செய்து விட்டார் மோடி.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ