உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60 சதவீதம் கன்னடம் கட்டாயம் ; அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

60 சதவீதம் கன்னடம் கட்டாயம் ; அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கடைகள், ஹோட்டல்களின் பெயர் ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம் என அவசர சட்டம்கொண்டு வரப்பட்டு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கடைகள், ஹோட்டல்கள். சிறு உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை அங்கு நடத்தி வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் கடைகளின் பெயர் பலகைகளில் கன்னட மொழி இல்லை எனக் கூறி கர்நாடக ரக்ஷக் வேதிக் அமைப்பினர் கடந்த சில வாரங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் முதல்வர் சித்தராமயை தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் கன்னட மொழி கட்டாயம் என்ற அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி பெங்களூரில் சாலையோர கடைகள் துவங்கி பெரிய மால்கள் வரையிலான இடங்களின் பெயர்ப்பலகையில் 60 சதவீதம் கன்னட எழுத்துக்கள் இடம்பெற வரும் பிப்ரவரி இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.'உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளின் உரிமம் முதலில், 'சஸ்பெண்ட்' செய்யப்படும். தொடர்ந்து மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

DVRR
ஜன 06, 2024 19:33

திருட்டு திராவிட மாடல் போல அங்கு கயவர் கன்னட மாடல் ஆகா ஒகோவா


sami
ஜன 06, 2024 16:13

The problem with kannada people is that they think other state people are getting tons of money for free in bangalore. They don't understand that kannada people benefit lot from the other state people. Like taxes, huge rents, employment to kannada people, spike in real estate, etc. Without all this, kannada people will suffer. Everyone earn their bread and butter by hard work.


ellar
ஜன 06, 2024 12:14

மூன்று அல்லது நான்கு மொழிகளில் எழுத வேண்டிய நிலைமை அங்கு இருக்கிறது. 60% ஒரு மொழி என்பது டெக் சிட்டி அந்தந்தஸ்துக்கு பொருத்தமல்ல. இதை வைத்து தமிழகம் வியாபார ஈர்ப்பை முன்னிறுத்த வேண்டும்.


Ramesh Sargam
ஜன 06, 2024 07:42

கர்நாடகாவின் வளர்ச்சி, குறிப்பாக தலைநகர் பெங்களுருவின் வளர்ச்சி கன்னட மக்களால் மட்டும் ஆனதல்ல. அந்த வளர்ச்சியில் மற்ற மாநிலத்தவர்கள், வேறு மொழி பேசுபவர்களின், ஏன் வேறு நாட்டை சேர்ந்தவர்களின் பங்களிப்பும் உண்டு. ஆகையால் காங்கிரஸ் அரசு இந்த மொழியை வைத்து மக்களை பிரிப்பதை முதலில் நிறுத்தவேண்டும். மாநிலத்தில் வேறு எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க முயலவேண்டும்.


Sathyam
ஜன 06, 2024 11:43

ஓசி சோறு இலவசம் இதுக்கெல்லாம் வோட்டு போட்ட மக்கள் இனி வருந்த அனுபவிக்க வேண்டும் , காங்கிரெஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ மற்ற மொழி கலாச்சாரம் மேல் தாக்குதல் வன்முறை , நதி நீர் ப்ரிச்சனை எல்லாம் வரும் , இந்த கேடுகெட்ட நாசமா போற காங்கிரெஸ் நாட்டின் வியாதி சாபக்கேடு , இதே கன்னட அமைப்பினர் பிரவீன் மற்றும் இதர ஆர் எஸ் எஸ் ஹிந்துக்கள் கொல்லப்படும்போது எங்கே ஒரு குரல் இல்லை இந்த கன்னட அமைப்பினர் காங்கிரெஸ் கட்சியால் தூண்டிவிடப்பட்ட ஏவப்பட்ட மிருகங்கள் , இது மகா மேளம் இப்டி இருந்தால் , இனி அணைத்து தொழில் முதலீடுகள் வெளியே சென்று விடும் இதே கன்னட அமைப்புகள் சட்டம் ஆதரவு இல்லை


Ramesh Sargam
ஜன 07, 2024 01:02

சரியாக கூறினீர்கள்.


Kanakala Subbudu
ஜன 06, 2024 06:46

உருப்படியான யோசனை சொல்ல நம் அரசியல்வாதிகளுக்கு யாருமே கிடைக்க மாட்டார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் தான். நீண்ட கால நோக்கில் எதுவும் செய்ய மாட்டார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் கர்நாடகாவை விட்டு கிளம்பினால் தான் தெரியும். நடக்கும்


chennai sivakumar
ஜன 06, 2024 05:46

அப்படியே ஆங்கிலமும் கட்டாயம் என்று சட்டத்தை திருத்த வேண்டும். தமிழகம் போல இரு மொழிகளில் பொது இடங்களில் குறிப்பிட விரும்புகிறேன்


Prasad VV
ஜன 06, 2024 19:30

ஆங்கிலமும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை