மேலும் செய்திகள்
கருணாநிதி மாடு பிடி வீரரா : சீமான் கேள்வி
2 hour(s) ago | 2
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
3 hour(s) ago | 2
மைசூரு: மைசூரில் உள்ள ராமர் கோவில் ராமர் சிலைக்கு ஏழு புனித நதிகளின் தண்ணீரால் இன்று அபிஷேகம் செய்யப்படுகிறது.மைசூரு அசோக் சாலையில் உள்ள ராமர் கோவிலில், இன்று சிறப்பு பூஜை அபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக காவிரி, கபிலா, நர்மதா, சிந்து, கங்கா, சரயு, யமுனா ஆகிய ஏழு புனித நதிகளில் இருந்து, வாசவி டிரஸ்ட் அமைப்பினர், புனித நீர் எடுத்து வந்து உள்ளனர்.புனித தண்ணீர் இருக்கும், குடங்களை கையில் ஏந்தி பெண்கள், நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று ஊர்வலமாக சென்றனர். இந்த புனித தண்ணீர், ராமர் சிலைக்கு இன்று அபிஷேகம் செய்யப்படுகிறது. இதுதவிர 1,08,000 துளசி செடிகளின் விதைகளை பயன்படுத்தியும் அபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், கோவிலில் மும்முரமாக நடக்கிறது.
2 hour(s) ago | 2
3 hour(s) ago | 2