நிலக்கரி சுரங்க விபத்தில் 7 பேர் பலி
கோல்கட்டா: மேற்கு வங்க நிலக்கரி சுரங்க விபத்தில் 7 தொழிலாளர்கள் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள லோக்பூர் பகுதியில், தனியார் நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. நிலக்கரியை பிரித்தெடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில், ஏழு பேர் உடல் சிதறி பலியாகினர்; மேலும் பலர் காயம் அடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுரங்க விபத்து தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.