ஏர் இந்தியா விமானத்தில் 7 பேர் மயக்கம்
மும்பை: ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, 'ஏர் இந்தியா' விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது.வழியில் திடீரென இரு ஊழியர்கள் மற்றும் ஐந்து பயணியர் என ஏழு பேருக்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால், பீதி அடைந்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு, விமானம் மும்பை வந்து இறங்கியது. அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்தனர். எனினும் தீவிர பாதிப்படைந்த இரு ஊழியர்கள் மற்றும் இரு பயணியர் விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.விமானத்தில் வழங்கப்பட்ட உணவு விஷத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.