உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்

35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜான்பூர்: உத்தர பிரதேசத்தில், 35 வயது பெண்ணை திருமணம் செய்த 75 வயது முதியவர், மறுநாளே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யின் ஜான்பூர் மாவட்டம், குச்மச் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்குரூரம், 75. விவசாயியான இவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்தார். தனிமையில் வசித்து வந்த சங்குரூரம், உ.பி.,யின் ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த மன்பாவதி என்ற 35 வயது பெண்ணை மறுமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு, சங்குரூரமின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அதை பொருட்படுத்தாமல் அப்பெண்ணை சங்குரூரம் கடந்த மாதம் 29ம் தேதி திருமணம் செய்தார். இதைத்தொடர்ந்து திருமணத்தை பதிவு செய்தார். அதன்பின் உள்ளூர் கோவிலில், பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டனர். திருமணம் நடந்த அன்றைய தினம் இரவு, வீட்டுப் பொறுப்புகளை கவனித்து கொள்வது உட்பட, தங்கள் வாழ்க்கையை பற்றி இருவரும் நீண்டநேரம் உரையாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலை, சங்குரூரமின் உடல்நிலை திடீரென பாதிப்புக்குள்ளானது. உடனே, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், சங்குரூரம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிலர், சங்குரூரமின் உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankar
அக் 02, 2025 12:59

இது என்ன புதுசா


எஸ் எஸ்
அக் 02, 2025 11:47

35 வயது பெண்ணை மணமுடிக்க துணிந்துள்ளாரே


பாமரன்
அக் 02, 2025 09:30

கண்டிக்கத்தக்கது...


தெய்வநாயகம்,பரமக்குடி
அக் 02, 2025 14:43

ஏலே பக்கோடா பாமரா முட்டுச் சந்துல இருந்து இப்பதான் வெளியே வந்தியா?


ஜெகதீசன்
அக் 02, 2025 07:39

பணம் சொத்துக்காக நடத்த திருமணம் தானே .....


Sun
அக் 02, 2025 07:24

வந்த உடனேயே?


வாய்மையே வெல்லும்
அக் 02, 2025 10:38

இறைவா நல்லவர்களை எங்களுக்கு கொடு. நிறைய பேருக்கு துர்புத்தி தான் இருப்பதாக தெரிகிறது


Raj
அக் 02, 2025 06:51

75 இல் 35 சனி வந்து எமனாக மாறிவிட்டது.


Ganesun Iyer
அக் 02, 2025 06:31

கல்யாணம் ரிஜிஸ்டர் ஆயிடிச்சில்ல உடுங்க, சொத்தெல்லாம் மனைவிக்குத்தான்.. வாழ்த்துக்கள்..


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 02, 2025 04:51

இப்படி ஒரு கில்மா நூச்சு கொடுத்து உசுப்பேத்த வேண்டியது .... எதையாவது எழுதப்போக அதை கட்டிங் ஓட்டிங் செஞ்சு ..... ம்ம்ம் .... நல்லா இருங்க .....


பாமரன்
அக் 02, 2025 09:29

உங்களுக்குமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை