உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண்

தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் நக்சல் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கத்தில் இருந்த பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டது. போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஏராளமான நக்சல் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சரண் அடைந்து வருகின்றனர்.நீண்ட காலமாக நக்சல்கள் அமைப்பில் இருந்த பலர், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்லத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.இது தொடர்பாக முலுகு மாவட்ட போலீசார் கூறியதாவது:மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு பிரிவு குழு உறுப்பினர் , இரண்டு பகுதி குழு உறுப்பினர்கள் உட்பட 8 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷபரிஷ் முன் சரணடைந்தனர்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 355 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.நக்சலிச பாதையை விட்டு வெளியேறி தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ முடிவு செய்து சரண் அடைந்துள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ