உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா; ஆதரவாக கையெழுத்திட்ட 80 எம்.பி.,க்கள்!

புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா; ஆதரவாக கையெழுத்திட்ட 80 எம்.பி.,க்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆதரவாக 80 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.திபெத்தை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 90 வயதான தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என திபெத் தொடர்பான இந்திய பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு 80 எம்.பி.,க்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர்.திபெத் தொடர்பான அனைத்துக் கட்சி இந்திய பார்லிமென்ட் மன்றம், திபெத் அரசின் பிரதிநிதிகளை பலமுறை சந்தித்துள்ளது. இந்த குழுவின் ஒருகிணைப்பாளராக உள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., சுஜீத் குமார் கூறியதாவது: ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி 80 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.100 எம்.பி.க்களின் கையொப்பங்களைச் சேகரித்து முடிந்தவுடன் சமர்ப்பிக்கப்படும். இந்த குறிப்பாணையில் கையொப்பமிட்டவர்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் அடங்குவர். தலாய் லாமாவின் புதிய வாரிசை நியமிப்பதில் சீனாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மன்றம் உறுதியாக நம்புகிறது. திபெத் தொடர்பான பிரச்னைகளை எழுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Senthoora
ஜூலை 07, 2025 17:35

இப்போ உரியது, உண்மை, உழைப்பு, நேர்மை, மனிதாபிமானத்துக்கு பாரத ரத்னா விருது இல்லை. சிபாரின்சின் பேரில் வழங்க படுகிறது. உண்மையை ஒத்துக்கொண்டார்கள்


Nada Rajan
ஜூலை 07, 2025 17:32

தலாய் லாமா நாடு கடத்தப்பட வேண்டும்


SUBBU,MADURAI
ஜூலை 07, 2025 18:58

உன்னோட டாடி அநேகமா ஒரு சீனராகத்தான் இருக்க வேண்டும் உன் மம்மிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Anand
ஜூலை 07, 2025 19:17

சீனனின் எச்சங்கள் இங்கும் இருக்கிறது போல..


SUBRAMANIAN P
ஜூலை 07, 2025 16:53

சீனா சரியான திருட்டுப்பையன். எப்படிடா அடுத்தவன் வீட்டை ஆடையப்போடலாம்னு சதி பண்ணிகிட்டே இருப்பான். டிபெட்டுல இருந்து சீனாக்காரனை அடிச்சி துரத்த உலகநாடுகளுடன் சேர்ந்து இந்தியா திபெத்துக்கு உதவவேண்டும்.


D Natarajan
ஜூலை 07, 2025 16:25

பாரத் ரத்னா , இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம்.


தத்வமசி
ஜூலை 07, 2025 15:50

கட்டாயம் தரவும். நானும் வழி மொழிகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை