உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புத்த துறவிகளின் 80,000 அந்தரங்க படங்கள் பறிமுதல்

புத்த துறவிகளின் 80,000 அந்தரங்க படங்கள் பறிமுதல்

பாங்காக்: தாய்லாந்தில், புத்த மடாலயங்களின் தலைமை துறவிகள் பலர் இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகிய 80,000 அந்தரங்க படங்கள், வீடியோக்கள் போலீசிஸ் விசாரணையில் சிக்கின. இதனால் தாய்லாந்து மன்னர் மற்றும் பொது மக்கள் புத்த துறவிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

மிரட்டல்

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் பிரபல புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தலைமை துறவி சமீபத்தில் திடீரென தன் துறவு வாழ்க்கையை கைவிட்டார்.இது சர்ச்சையான நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்தனர். அதில் துறவியுடன் நெருங்கி பழகிய பெண் ஒருவர், தான் கர்ப்பம்அடைந்ததாகக் கூறி, 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதால் அவர் துறவு வாழ்க்கையை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த பெண் குறித்து போலீசார் விசாரித்தனர். அதில் பாங்காக்கைச் சேர்ந்த விலாவன் எம்சாட், 35, என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சொகுசு பங்களா

இது குறித்து போலீசார் கூறியதாவது: பாங்காக் அருகே உள்ள நோன்தாபுரியில், விலாவனின் சொகுசு பங்களா உள்ளது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களில் துறவிகளின் 80,000 அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்தன.இவை 2022ல் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வரை எடுக்கப்பட்டவை. இதில் மடாலயங்களின் ஒன்பது தலைமை துறவிகளும் அடக்கம். அதை வைத்து மிரட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் துறவிகளிடம் 100 கோடி ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக துறவிகளை தொடர்புகொண்டு தன் வலையில் வீழ்த்தி, திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். ஒரு துறவி விலாவனை ஷாப்பிங் அழைத்துச் சென்று 75 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி தந்துள்ளார்.இந்த பாலியல் மோசடியில் சிக்கிய துறவிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது. பலர் விலாவனுடன் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.இந்த விவகாரம் தற்போது தாய்லாந்தில் பெரிய பிரச்னையாகி உள்ளது. இதனால் அந்நாட்டு மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தன் 73வது பிறந்த நாளுக்கு அழைத்திருந்த 80க்கும் மேற்பட்ட துறவிகளுக்கான அழைப்பிதழ்களை ரத்து செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jayagovindaram Jps
ஜூலை 24, 2025 16:47

காமத்திலிருந்து விடுபட்டு துறவு வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். வாஸுதேவே பகவதி பக்தி-யோக ப்ரயோஜித: ஜனயதி யாஸு வைராக்யம் ஞானம் ச யத் அஹைதுகம் ஸ்ரீமத் பாகவதம்1.2.7


subramanian
ஜூலை 19, 2025 20:29

அந்த பெண் செய்தது மாபெரும் தவறு, அவளுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை தலா 25 கசை அடிகள். துறவிகளுக்கு மூன்று வேளை 50 கசை அடிகள், தலைமை புத்த மடாலயம் முன்பு பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும்.


இளந்திரயன், வேலந்தாவளம்
ஜூலை 19, 2025 18:31

அதெப்படி தான் மட்டுமே செய்த கில்மாக்களை துறவிகள் செய்தால் கோபம் வரத்தானே செய்யும்


hasan kuthoos
ஜூலை 19, 2025 09:17

இல்லறம் துறப்பது , பிரம்மச்சரியம் போன்றவை மனித இயல்புக்கு மாறானது , காமம் என்பது ஒரு உணர்வே, அதை வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம் , ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் கட்டுப்பாடு இழந்து விடும் ,


Padmasridharan
ஜூலை 19, 2025 04:48

இந்த பெண்மணி மோசடி செய்தது தவறா அல்லது துறவிகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றியது தவறா சாமி. இன்னும் iskkcon பக்கம் வரவில்லை செய்தியாளர்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2025 07:25

இது தேவையில்லாத கருத்து. இந்துக்கள் மனதை புண்படுத்தவே இந்த கருத்து பதிவிட்டு உள்ளதாக கருதுகிறேன். இஸ்கான் அமைப்பில் துறவறம் என்பது கிடையாது. இல்லறத்தில் இருந்து கொண்டு முக்தி பெறும் வழிகாட்டுதல் தான் வழங்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனம் நோகும் படி கருத்துக்கள் கூறுவது வருந்த தக்கது. அதுவும் இந்து மதத்திற்கு எதிராகவே கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். முஸ்லிம் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக யாரும் கருத்து பதிவிடுவது கிடையாது. ஆனால் இந்து மதத்தில் உள்ள எந்த இந்துவும் மற்ற மதங்களுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடுவது இல்லை. மற்ற மத மக்களையும் மதித்து நடக்கிறார்கள் இந்துக்கள். அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள். சமஸ்த லோகோ சுகினோ பவந்து என்பதே இந்து மதத்தின் தாரக மந்திரம். இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.


Kasimani Baskaran
ஜூலை 19, 2025 08:27

இஸ்கான் - பிரபுபாதா இருக்கும் வரை பணம் என்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவர் மறைந்தபின் பணத்தை / சொத்துக்களை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள். ஆனால் அடிப்படையில் கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் எடுத்துச்செல்வதில் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ஒருசில கேடிகள்/சம்பலப்புத்தி உள்ளவர்கள் உள்ளே புகுத்தாலும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப் படுகிறார்கள். அடிப்படையில் கிருஷ்ண பக்தி இருக்கும் இடத்தில அமைதியும், வெற்றியும், சமத்துவமும், நிம்மதியும் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராம ராம ராம ஹரே ஹரே - என்பதை பக்தியுடன் ஜெபித்தால் முக்தியே கிடைக்கும்.


Ganesun Iyer
ஜூலை 21, 2025 18:01

பத்ம சிறிதரன் அந்த பக்கமும் அப்படித்தானா ?


Rathna
ஜூலை 24, 2025 11:44

விவரம் தெரியாமல் கருத்து எழுத கூடாது. ISKCON திருமணம் இல்லாத வாழ்க்கையை பரிந்து உரைக்க வில்லை.


M Ramachandran
ஜூலை 19, 2025 03:08

அக்காலத்தில் நம் நாட்டில் துறவறம் கொண்டால் இமயமாலிய்ய பொஆந்திராதனிமையான இடத்திற்கு சென்று விடுவார்கள்யார் கண்ணிலும் படமாட்டார்கள்.ஜாமத்தில் 4:00 மணிக்கு எழுந்து ஆற்ற கரைய்ய சென்று காளியை கடன் முடித்து இறைவன் குறித்து தவம் மேர்கொள்வார். 50 - 60 வருடத்திற்கு முன் சபரி மலை ஐயப்பன் மண்டல விரதம் எடுப்பவர்கள் கடலூர் பெரும்பாலும் வியாபாரிகள் தனியாக மண்டபத்தில் தங்கி $:30 மணிக்கு எழுந்து கெடிலம் நதி கரைக்கு சென்று காலை கடன் முடித்து கோவிலுக்கு சென்று விட்டு மண்டபத்திற்கு திரும்பி விடுவார்கள். அவர்களெ சமயல் செய்து சாப்பிட்டு கொள்வார்கள். இக்காலத்தில் மலையய்க்கு செல்பவர்கள் பெரும்பாலும் விரதத்தை சரி வர கடை பிடிப்பதில்லை. நாங்கள் செல்லும் புல் மேடு மற்றும் பெரு வழி பாதியில் கரிமலையில் பயணத்தின் போது யானை குறுக்கிடும். நாங்கள் ஐயப்பன் நாமத்தை மனதிற்குள் சொல்லி கொண்டு அசையாமல் நிற்போம்.எஙகளை திரும்பி பார்த்து விட்டு பிறகு அதன் பாதையில் இறங்கி சென்று விடும். அக்காலத்தில் முஸ்லீம் மார்கள் சபரி மலைக்கு வெண்ணிற ஆடை அனிந்து இரு முடி சுமந்து வருவார்கள் அவர்கள்பெறு வழி பாதையில் தான் செல்வார்கள். சிறிய கலயம் கொண்டு வருவார்கள் கொஞ்சம் அரிசி நொய் கொண்டு வருவார்களாயிருவர் அல்லது மூவர் தான் சேர்ந்து வருவார்கள். மதியம் கழிந்து ஓரிடத்தில் அமர்ந்து காஞ்சி காய்ச்சி குடிப்பார்கள் ஒரு வேளை தான் உணவு. அவர்கள் இது கானகம் சாமி ஐயப்பன் நாமம் பறை என்று கூறுவார்கள். வெட்டி பேச்சு கூடாது. .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை