உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயலில் சுட்டு கொல்லப்பட்ட 87 காட்டுப்பன்றிகள்

வயலில் சுட்டு கொல்லப்பட்ட 87 காட்டுப்பன்றிகள்

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஓங்கல்லுார் பகுதியில் உள்ள நிலங்களில், காட்டு பன்றிகளின் தொந்தரவு அதிகமுள்ளது. இவை நெல் உள்ளிட்ட சாகுபடி பயிர்களை சேதப்படுத்தி வந்தன. பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் புகார்களை தொடர்ந்து, ஓங்கல்லுார் ஊராட்சி குழுவினர், காட்டு பன்றிகளை சுட்டு கொல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், லைசன்ஸ் உள்ள துப்பாக்கி சுடுவோர் தலைமையில், 18 மணி நேரத்தில் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளிலிருந்த, 87 காட்டு பன்றிகள் சுட்டு கொல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

PRS
அக் 23, 2025 19:01

பாவம். அதுங்க வாழுகிற இடத்தை நாம் எடுத்து கொண்டால் விலங்குகள் எங்கே போகும்? ஒரு உயிரை எடுப்பது எவருக்கும் உரிமை கிடையாது.


R K Raman
அக் 23, 2025 17:59

இதுவே தெருநாய்கள் கடித்தாலும் பரவாயில்லை என்று ஒரு கூட்டம் கூடி பிலாக்கனம் வைக்கும். அவங்க குழந்தைகள் கடி பட்டால் மட்டுமே சும்மா இருப்பாங்க


Krishnamurthy Venkatesan
அக் 23, 2025 10:09

மழையை சுட்டு வீழ்த்த முடியாது. ஆனால் நெற்பயிர்களை மழை நீரில் இருந்து காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் அல்லவா? எத்தனையோ தனியார் திருமண மண்டபங்கள், சமூக நல கூடங்கள், அம்மா உணவகம் இருக்கின்றனவே. அவற்றில் பத்திரப்படுத்தி இருக்கலாம். இது ஒரு தொடர் கதையென்பதால், இத்துணை வருடங்களாகியும் நிரந்தர தீர்வு காணாதது ஏன்?


karthik
அக் 23, 2025 17:20

இது வேற கதை... கேரளாவில் நடந்தது.. தனியார் திருமண மண்டபம் இதற்காகவா இருக்கிறது? மாதம் மாதம் 1000 ருபாய் ஓசி வருஷம் 12500 கோடி ருபாய்... அந்த பணத்தில் மாவட்டம் தோறும் உலகின் மிகப்பெரிய நெல் குடோன்களை கட்டலாம்..


SURESH M
அக் 23, 2025 09:52

விலை மதிப்பில்லா கேள்வி ... நன்றி


Ramesh Sargam
அக் 23, 2025 06:44

தமிழகத்தில் இரண்டு நாட்கள் பெய்த மழையால் 20 லட்சம் டன் நெல் அழிந்துபோயிருக்கிறது. பயிர்களை அழித்த பன்றிகளை சுட்டுவீழ்த்துவதுபோல, இந்த 20 லட்சம் டன் நெல் அழிவிற்கு காரணமானவர்களை அப்படி சுட்டுவீழ்த்தமுடியுமா? வாயில்லா ஜீவன்களுக்கு என்ன தெரியும் பயிர்களை அழிக்கக்கூடாதென்று? ஆனால் ஆறறிவுள்ள ஜீவன்கள் செய்த தவறினால் 20 லட்சம் டன் நெல் அழிந்துவிட்டன. இந்த ஆறறிவுள்ள ஜீவன்களுக்கு என்ன தண்டனை?


Priyan Vadanad
அக் 23, 2025 07:07

அறிவு கொழுந்து. வாருங்கள் மழையை சுட்டு வீழ்த்துங்கள்.


நிக்கோல்தாம்சன்
அக் 23, 2025 08:08

அய்யா சாமி என்னவொரு கேள்வி, பகுத்தறிவற்ற தமிழக வாக்காளர்களுக்கு இந்த கேள்வி போயி சேருமா


SURESH M
அக் 23, 2025 09:56

பிரியா வடநாடு நல்ல வருவ..... அவர் சொல்லும் வார்த்தை விவசாயம் செய்த மக்களுக்கு தெரியும்.. உனக்கும் புரியும் வரிகளை உற்றுநோக்கு.. அப்பாவும் நீ இப்படித்தான் என்றால் சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை உன்னை கடந்து செல்வதே எங்களுக்கு நலம்


Ramesh Sargam
அக் 23, 2025 10:13

அறிவுக்கொழுந்தே, நான் நெல் அழிவுக்கு காரணமானவர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று கூறினேன். என்னடாவென்றால் மழையை சுட்டுவீழ்த்தவேண்டும் என்று நான் கூறியாதாக தவறாக புரிந்துகொண்டுள்ளாய். மழைக்காலத்துக்கு முன்பே அறுவடைக்கு இருந்த நெற்கதிர்களை போதிய கொள்முதல் விலை கொடுத்து வாங்கியிருந்தால், இன்று அந்த அழிவு ஏற்பட்டிருக்காது. அதை அறிவுக்கொழுந்து உன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏதோ ரூபாய் இருநூறுக்கு ஆசைப்பட்டு உளறுகிறாய்.


SUBRAMANIAN P
அக் 23, 2025 17:53

வடநாட்டு பிரியனுக்கு மூளை மூக்குவழிய கொட்டுது.. அறுவடை செய்த 20 லட்சம் டன் நெற்பயிர்களை பாதுகாக்க முடியாமல்தான் வீணானது.. அதற்கு தகுந்த குடோன்களை கட்டித்தராத பாழாப்போன அரசாங்கமே காரணம்.. ரொம்ப முட்டுக்குடுக்காத... உனக்கே அது ஒருநாள் திரும்பும்..


சமீபத்திய செய்தி