உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 12 பேர் உயிரிழப்பு

டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 12 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு மிக்க டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வது நுழைவு வாயில் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. குண்டுவெடித்ததால், காரில் இருந்த பாகங்ள் 300 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x8c6jd36&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து டில்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

என்ஐஏ விரைவு

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பிரதமர் ஆலோசனை

டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.

மெதுவாக சென்ற காரில்

டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது: செங்கோட்டை அருகே இன்று மாலை 6:52 மணிக்கு மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் குண்டுவெடித்தது. அப்போது அங்கு சிலர் இருந்தனர். அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. டில்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி, தடயவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடக்கிறது. கூடுதல் தகவல் கிடைத்ததும் பகிரப்படும். சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

thangam
நவ 11, 2025 06:20

நீ மனுசனே இல்ல தெரியுமா உன்னை எல்லாம் தேதியை பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணனும்


தாமரை மலர்கிறது
நவ 11, 2025 00:15

பிஹாரில் காங்கிரஸ் ரெண்டு அல்லது மூணு சீட் ஜெயித்து விடும் என்றதுமே, தீவிரவாதிகளுக்கு மீண்டும் துளிர் விட்டு விட்டது.


மனிதன்
நவ 11, 2025 00:14

தேர்தல் கால விபரீத விளையாட்டு, இறைவா அரசியல் வியாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்று... புல்வாமாவைப்போல் இதுவும்?????


பேசும் தமிழன்
நவ 10, 2025 23:39

இதனை யார் செய்து இருப்பார்கள் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.....ஆனாலும் தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்று உருட்டுவானுக பாருங்கள் .....உண்மை தான் அய்யா தீவிரவாதத்துக்கு மதம் இல்லை....ஆனால் தீவிரவாதிகள் எல்லோரும் ஒரு மதம் சார்ந்த ஆட்களாக இருப்பதன் மர்மம் என்ன ??


SRIRAMA ANU
நவ 10, 2025 23:27

உளவுத்துறை தோல்வி.... இது தேர்தலுக்கான திட்டமிட்டு சதியா? அது எப்படி பத்து நிமிடத்தில் வந்து விட்டார்கள்? அப்படி என்றால் முன்பே தெரியுமா? வெடிக்கட்டும் என்று காத்திருந்து வந்தார்களா?


pakalavan
நவ 10, 2025 23:22

உளவுத்துறை வெட்டிதென்டம்


பாபு
நவ 10, 2025 23:16

என்னதான் துரிதமாகச் செயல்பட்டு தீவிரவாதிகளைப் பிடித்தாலும், இங்கு வக்கீல்கள் நீதிமன்றங்கள் பல நாட்கள் கழித்து அ நீதியை வழங்குகின்றன. இங்குதான் மாற்றம் தேவை.


Ravi
நவ 10, 2025 22:38

Operation Sindoor 1.01 loading


sundar
நவ 10, 2025 22:30

அமைதிகள் இருக்கும் வரை அமைதி ஏற்படாது.


கடல் நண்டு
நவ 10, 2025 22:29

சந்தேகமின்றி மர்ம நபர்களின் உதவியோடு நடந்த சம்பவம் …. நன்றி கெட்ட ஈனப்பிறவிகள் .. இப்படி ஒரு கேடுகெட்ட அடிப்படை வாதமும் , மார்க்க மதமும் இந்த உலகத்துக்கு தேவையா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை