உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது போதையில் வாகனம் ஓட்டிய 9 பஸ் ஓட்டுனர்கள் உரிமம் ரத்து

மது போதையில் வாகனம் ஓட்டிய 9 பஸ் ஓட்டுனர்கள் உரிமம் ரத்து

பெங்களூரு -பெங்களூரில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒன்பது தனியார் பஸ் ஓட்டுனர்கள் மீது, பெங்களூரு நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.பெங்களூரில் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதைத்தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒன்பது தனியார் பஸ் ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து இணை கமிஷனர் அனுசேத் கூறியதாவது:நேற்று, நேற்று முன்தினம் இரவு சிறப்பு வாகன சோதனை நடத்தினோம். அப்போது 881 வாகனங்களை சோதனையிட்டதில், ஒன்பது தனியார் பஸ் வாகன ஓட்டுனர்கள் குடித்து விட்டு ஓட்டியது தெரிய வந்தது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், பஸ் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் 50 முதல் 60 பயணியர் பயணம் செய்து, அவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஓட்டுனர் நடந்து கொண்டுள்ளார். கடந்தாண்டு 24 விபத்துகள் நடந்துள்ளன. இதில், சில பாதசாரிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி