உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனாவுக்கு 9 பேர் பலி மொத்த பாதிப்பு 7,400 ஆக உயர்வு

கொரோனாவுக்கு 9 பேர் பலி மொத்த பாதிப்பு 7,400 ஆக உயர்வு

புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நாடு முழுதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, 7,400 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். நம் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகம்.இதையடுத்து, நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், 269 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை, 7,400 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். மஹாரஷ்டிராவில் 4, கேரளாவில் 3, தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, ஒட்டுமொத்தமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக கர்நாடகாவில் ஒரே நாளில் 132 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். குஜராத்தில் 79, கேரளாவில் 54, மத்திய பிரதேசத்தில் 20, தமிழகத்தில் 12, சிக்கிமில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு இதுவரை, 2,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து, குஜராத்தில் 1,437, டில்லியில் 672, மஹாராஷ்டிராவில் 613, கர்நாடகாவில் 527, உ.பி.,யில் 248, தமிழகத்தில் 232 பேர் , ராஜஸ்தானில் 180, ஆந்திராவில் 102 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அருணாச்சல பிரதேசம், சண்டிகர், லடாக், மிசோரம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில், கொரோனா தொற்று இல்லை என, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை