உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு!

ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.' ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படையின் 6 போர் விமானங்கள், 2 கண்காணிப்பு போர் விமானங்கள், சி130 ஹெர்குலஸ் விமானம் மற்றும் 10 ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தியாவின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானின் வான்வெளி மற்றும் தரைவழி ராணுவ சொத்துகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு உள்ளது. வான்வெளி நடவடிக்கையின் போதே இந்த 6 போர் விமானங்களும் அழிக்கப்பட்டு உள்ளன. இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், அந்நாட்டின் பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அழிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் இந்திய தரைவழி ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான்வெளி முன்னெச்சரிக்கை கருவிகளால் எடுக்கப்பட்ட ரேடார் கண்காணிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.n. Dhasarathan
ஜூன் 04, 2025 20:54

நம்முடைய ராணுவத்தில் எத்தனை விமானங்களை இழந்தோம் என்பதையும் தெரிவிப்பதே உண்மையான தேச பக்தி எதிரி நாட்டில் எத்தனை அழித்தோம் என்பது மட்டுமல்ல வீரம், மக்களுக்கு உண்மையாக இருப்பதுதான் வீரம், நேர்மையாக நம் அழிவுகளை தெரிவித்து அது மீண்டும் நடக்காத அளவில் திருந்துவதுதான் நம் பெரும் ஆற்றல். அதை விடுத்து ஜால்றா போடுவது, மாத கணக்கில் அதையே பேசுவதும் மோசமான செயல்தான்.


மூர்க்கன்
ஜூன் 04, 2025 22:03

தம்பி எதுக்கும் வக்கீல்கிட்ட முன்ஜாமீன் வாங்கி வச்சுக்கிருங்க.. கதவை தட்டலாம் வழக்குகள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 04, 2025 22:42

பாகிஸ்தான் ஆக்கிரத்த காஷ்மீர் எப்படி பாகிஸ்தான் ஆக்கிரமித்து என்று கூறினால் கூட உண்மையான தேசபக்தி ஆகும். இந்தியா எவ்வளவு பாகிஸ்தான் போர் விமானங்களை அழித்தது என்று ஆதார் பூர்வமாக கூறியுள்ளது. அது போல பாகிஸ்தானும் எவ்வளவு இந்திய போர் விமானங்களை அழித்தது என்று ஆதார் பூர்வமாக கூற வேண்டும். போரில் எதிரிகள் பலவீனத்தை கண்டறிவது போர் உக்தி. பலவீனத்தை எதிரி சொல்லுவான் என்று காத்திருக்க கூடாது. ஃபீல்டு மார்ஷல் பட்டம் வாங்கியவர் வீரமாக எவ்வளவு இந்திய விமானங்கள் அழிக்கப் பட்டன என்று ஆதார பூர்வமாக கூறிவிட்டு அல்லவா பட்டம் வாங்கி இருக்க வேண்டும். இந்தியா ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியதாக கூறியது ஆனால் பாகிஸ்தானோ மேலும் 7 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக படங்களுடன் ஒவ்வொரு நாடாக சென்று யாசகம் வாங்கி கொண்டு உள்ளது. இந்தியாவும் பாக்கிஸ்தான் எவ்வளவு விமானங்கள் அழித்தது என்று கூறுவதற்காக காத்து கொண்டு உள்ளது.


Ramesh Sargam
ஜூன் 04, 2025 20:28

ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் எப்பொழுது அழிப்பீர்கள்?


தாமரை மலர்கிறது
ஜூன் 04, 2025 19:11

காங்கிரஸ் காலத்தில் காபி குடிக்க போவது மாதிரி இந்தியாவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், பிஜேபி காலத்தில் இனி உள்ளே நுழைய மாட்டார்கள்.


மூர்க்கன்
ஜூன் 04, 2025 22:01

விமானத்தோட கடத்திட்டு போனதும் பக்லகாம் வந்து காப்பி குடிச்சுட்டு சாவகாசமா போனதும் காங்கிரஸ் ஆட்சிதான்னு நினைக்கிறன்.


S.L.Narasimman
ஜூன் 04, 2025 17:04

அழித்தது அழித்தீர்கள் எல்லா போர்விமானங்களையையும் ஒரேடியாக அழித்து முடித்திருந்தால் இனி வாலாட்டமாட்டாங்கெ. இன்னுமும் ஆட்டம் போட்டு கொண்டு தானே இருக்காங்கெ.


மூர்க்கன்
ஜூன் 04, 2025 22:02

வெற்றி வெற்றி பீகார்ல ஓட்டு போட மறந்துராதீங்க??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை