வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த இரங்கல்
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலில் சந்தன உற்சவ விழா நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது 20 அடி நீளமுள்ள சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=stsaloip&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து மீட்பு படை அதிகாரி கூறியதாவது: இந்த விபத்தில் 9 பேர் இறந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் நாங்கள் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது, என்றார்.
ஆழ்ந்த இரங்கல்