மேலும் செய்திகள்
பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
26-Jan-2025
கோலார் : சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கோலார் மாவட்டம், முல்பாகலின், மாருதி நகரில் வசிப்பவர் கங்காதர் என்ற தேஜு, 28. இதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு, கங்காதர் பாலியல் தொல்லை கொடுத்தார். 2023 மே 17ல், சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தார்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, கங்காதரை பேத்தமங்களா போலீசார் கைது செய்தனர். விசாணையை முடித்து கோலாரின் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.விசாரணையில் கங்காதரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டு சிறையும், 45,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி பிரசாத் நேற்று தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில், 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.
26-Jan-2025