உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைக்கிளிங்கில் சாதிக்கும் சிறுவன்

சைக்கிளிங்கில் சாதிக்கும் சிறுவன்

- நமது நிருபர் -பாகல்கோட்டின் மாராபுரா கிராமத்தை சேர்ந்த சைக்கிளிங் விளையாட்டு வீரர் ஹொன்னப்பா சிதானந்த தர்மட்டி. இவர் தேசிய அளவிலான ரோட் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாகல்கோட், மஹாலிங்கபுரா அருகில் உள்ள மாராபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஹொன்னப்பா தர்மட்டி, 15. சைக்கிளிங் விளையாட்டு வீரரான இவர், மைசூரில் நடந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களின், மாநில அளவிலான ரோட் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில், இரண்டாவது இடம் பெற்றார்.மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களின் 33 சிறுவர்கள் பங்கேற்றனர்.ஹொன்னப்பா தர்மட்டி, 21 நிமிடம் 26 வினாடிகளில் 30 கி.மீ., சைக்கிளிங் செய்து, இரண்டாம் இடத்தை பிடித்தார்.தற்போது இவர், தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 4ம் தேதி, ஒடிசாவில் நடக்கவுள்ள, தேசிய அளவிலான ரோட் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் ஹொன்னப்பா தர்மட்டி பங்கேற்க உள்ளார். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி