உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கு; குற்றவாளியின் கைரேகையில் டுவிஸ்ட்

நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கு; குற்றவாளியின் கைரேகையில் டுவிஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் கை விரல் ரேகை, சம்பவம் நடந்த இடத்தில் பதிவான ரேகையுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் வழக்கை விசாரிக்கும் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3cxae1y4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த ஜனவரி 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்து, கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சயீப் அலிகான், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதற்கிடையே சயீபை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை, கடந்த ஜன., 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அவரின் பெயர் ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர், 30, என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்த மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.நடிகர் சயீப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் போலீசார் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் ஷரிபுல் கைது செய்யப்பட்டாலும், கூடுதல் ஆதாரங்களை மும்பை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
ஜன 27, 2025 14:42

நான் அவனில்லை - சினிமா நினைவிற்கு வருகிறது.


visu
ஜன 26, 2025 21:17

யாரையாவது புடிச்சு ஒப்புக்க வைக்கிறாங்களா


Palanivelu Kandasamy
ஜன 26, 2025 19:27

We were boasting of Aadhaar for long. Check the finger prints with aadhaar records. Also it has to be checked with all available criminal records.


என்றும் இந்தியன்
ஜன 26, 2025 18:38

அச்சு அசலாக திருட்டு திராவிட அறிவிலி மடியலரசின் ஏவல் துறை மாதிரித்தானா இதுவும். எனது விரலை வைத்தவுடன் சரிதான் ஆபீசுக்கு உள்ளே போ என்று ஒரு செக்கண்டில் சொல்கின்றது???இவ்வ்ளவு எளிமையான மின்னியல் இருக்கும்போது கைரேகையும் இவ்வளவு நாள் கைது செஞ்சி அதுக்கப்புறம் .......... டப்பா டப்பா அடித்து இவ்வளவு.........நாள் கழித்து அந்த கைரேகை இல்லை என்று தெரிந்ததாம்???குழப்பணும் குழப்பணும் குட்டையை குழப்பணும் என்று எண்ணிணால் இப்படித்தானிருக்கும் .


V வைகுண்டேஸ்வரன்
ஜன 26, 2025 16:33

வேங்கைவயல், வேங்கைவயல் னு இவ்வளவு ஆர்ப்பாட்டம் எதுக்கு என்றே தெரியவில்லை? Especially, தி மலர் வாசகர்கள் ஓவரா ஏனோ கூவிக் கொண்டிருக்கிறார்கள்? இதில் எத்தனை பேர் வேங்கைவயலில் வசிப்பவர்கள் என்று பார்த்தால் ஒரு வாசகர் கூட அங்கிருந்து இல்லை. CBCID 2, 3 பேரை குற்றவாளி என்று சொல்லிவிட்டது. அவனுங்களை ரிமாண்டில் எடுத்து விசாரணை பண்ணுவாங்க. ஜாமீன் குடுப்பாங்க. அல்லது தண்டனை குடுப்பாங்க. நமக்கு இதில் என்ன பிரச்னை??


வாய்மையே வெல்லும்
ஜன 26, 2025 21:16

தீயமூர்க்க ட்ரைவிஷா அவலட்சங்களை வாசகர்கள் அலசினால் தீவிர முட்டுக்கு பிரச்சனை வருவதுதானே உலகவழக்கம்


Oru Indiyan
ஜன 26, 2025 14:29

என்னங்க நீங்க. எங்க தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கை கொடுத்தீங்கன்னா, வேங்கைவயல் சம்பவம் மாதிரி ஒரு 3 வருஷம் கழிச்சு வீடியோ ஆடியோ ஆதாரம் கொடுத்து ஒரு 3 பேரை கைது செய்வார்கள்.


Barakat Ali
ஜன 26, 2025 14:25

எவனையாச்சும் புடிச்சு கேஸை முடிக்கலன்னா சட்டம் ஒழுங்கு மோசம் ன்னு கத்திகிட்டே பல கூட்டங்கள் வரும் .... அதுதான் மும்பையில் நடந்திருக்கு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை