மேலும் செய்திகள்
மோந்தா புயல் எதிரொலி; நாளை 43 ரயில்கள், விமானங்கள் ரத்து
1 hour(s) ago
மாணவர்கள் கவனம்: நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள்
2 hour(s) ago | 2
தொழில்நுட்பக் கோளாறு: துபாய் கிளம்பிய விமானம் சென்னை திரும்பியது
6 hour(s) ago | 2
லோக்சபா தேர்தலில், உத்தரகன்னடா தொகுதியில், எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவுக்கு இம்முறை சீட் கொடுக்க பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் எம்.பி., பதவிக்கு தகுதியற்றவர் என்ற கருத்து, பரவலாக எழுந்துள்ளது.அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, லோக்சபா தேர்தல் மீது பா.ஜ., பார்வையை திருப்பியுள்ளது. ஏற்கனவே தொகுதி வாரியாக, பா.ஜ., மேலிடம் ரகசிய ஆய்வு செய்து அறிக்கை பெற்றுள்ளது.தொகுதி நிலவரம், கட்சியின் நிலை, எம்.பி.,யின் செயல் திறன், அவர் மீது மக்களுக்கு உள்ள கருத்து, இம்முறை அவருக்கு உள்ள வெற்றி வாய்ப்பு ஆகியவை குறித்து, அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.இதில் சில எம்.பி.,க்களின் செயல் திறன் திருப்தியாக இல்லை. எனவே இம்முறை இவர்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என, கூறப்படுகிறது.சாம்ராஜ்நகரின் சீனிவாச பிரசாத், சிக்கபல்லாபூரின் பச்சேகவுடா, ஹாவேரியின் சிவகுமார் உதாசி உட்பட, சில எம்.பி.,க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என, ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இவர்களின் தொகுதிகளுக்கு, பா.ஜ., மேலிடம் மாற்று வேட்பாளர்களை தேடுகிறது.பெரும்பாலான தொகுதிகளில், இன்னாள் எம்.பி.,க்களுக்கு சீட் வழங்க வேண்டும் என, ஆதரவாளர்கள், தொண்டர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். ஆனால், உத்தரகன்னடா தொகுதியில், தற்போதைய எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவுக்கு, சீட் கொடுக்கக் கூடாது என்று குரல் எழுந்துள்ளது. எம்.பி.,யாக இருக்க இவர் தகுதியற்றவர் என, கட்சியினரே குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது:அனந்தகுமார் ஹெக்டே, அரசியல் ஓய்வு பெறும் காலம் வந்துள்ளது. உத்தரகன்னட தொகுதியில், இவருக்கு பதிலாக தகுதியான வேட்பாளரை களமிறக்க வேண்டும். ஆறு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டும், தொகுதி வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை.உத்தரகன்னடா லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கானாபுரா, கித்துாரு தொகுதிகள் வளர்ச்சி அடையவில்லை. சமீபத்தில் கானாபுரா தொகுதிக்கு, எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே வந்தபோது, 'மக்களின் பிரச்னைகளை தீர்க்காத நீங்கள் இம்முறை போட்டியிட வேண்டாம்' என, நேரடியாகவே அவரிடம் மூத்த தலைவர் ஒருவர் வலியுறுத்தினார்.அது மட்டுமின்றி, அனந்தகுமார் ஹெக்டேவுக்கு சீட் தர வேண்டாமென, கட்சி மேலிடத்துக்கு கானாபுரா, கித்துாரு தலைவர்கள் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 hour(s) ago
2 hour(s) ago | 2
6 hour(s) ago | 2