உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே அடி...! சிறுத்தையை கம்பால் அடித்து கொன்ற ‛வீர விவசாயி

ஒரே அடி...! சிறுத்தையை கம்பால் அடித்து கொன்ற ‛வீர விவசாயி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிஜ்னோர்: உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கார்பெட் தேசிய பூங்கா அருகே அமைந்துள்ளது பிக்காவாலா கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி தேக்வீர் சிங், 60; அங்குள்ள வயலில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை தாக்கி அருகேயுள்ள புதருக்குள் இழுத்து செல்ல முயன்றது. சிறுத்தையுடன் போராடிய அவர், அருகே கிடந்த கம்பை எடுத்து சிறுத்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், பலத்த காயமடைந்த சிறுத்தை சம்பவ இடத்திலேயே பலியானது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேக்வீரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nallavan
அக் 18, 2024 11:53

விவசாயி குணமடைய வேண்டுகிறோம்


veeramani
அக் 18, 2024 08:59

இந்திய நாட்டில் விவசாயிகள் மிகவும் பலவீனமானவர்கள். சரியான மதிப்பு கிடையாது. விவசாய பயிர்களை காப்பாற்ற மனிதன் மிருகம் பறவைகள் உடன் சண்டை போட்டுக்கொடே இருக்கவேண்டி உள்ளது . இதில் சிறுத்தை வேறு விவசாயியை சாப்பிட வந்துள்ளது. எவனாவது இந்த விவசாயி மேல் ஆக்ஷன் எடுத்தால் ...இந்திய விவசாயிகள் எதற்கும் தயார் ....


neutron
அக் 18, 2024 07:40

உடனே மிருக வதை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடுத்திருப்பார்களே வன விலங்கு ஆர்வலர்கள் பாவம் விவசாயிகள். எவ்வளவு போராட வேண்டியிருக்கின்றது.


Senthoora
அக் 18, 2024 12:06

புலிக்கு எட்கேனவே, ஹார்ட் அட்டாக் இருந்திருக்கு, அதான் ஒரே அடியில் போய்விட்டது. காவலில் இருந்த கைதி இறந்தபோது, ஒரு போலீஸின் மைண்ட் வாய்ஸ்.


Lion Drsekar
அக் 18, 2024 06:54

வீரத்தை பாராட்டவேண்டும் அதே நேரத்தில் கவலைக்கிடம் என்பது பரிதாபமாக உள்ளது, அவர் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறோம், வனத்துறையினர் இவர்மீது வழக்கு பதியாமல் இருக்கவேண்டும், இங்கு அவரவர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்வதில் வல்லவர்கள், வந்தே மாதரம்


ராமகிருஷ்ணன்
அக் 18, 2024 06:03

தமிழக சிறுத்தை குட்டிகள் சார்பில் வருத்தங்களை தெரிவிக்கவும்


Kasimani Baskaran
அக் 18, 2024 05:12

கண்டமேனிக்கு காடுகளை அழித்தாலோ அல்லது விலங்குகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்தாலோ இது போன்ற பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.


நிக்கோல்தாம்சன்
அக் 18, 2024 04:52

விவசாயி எவ்வளவு விஷயத்தை கையாள வேண்டியுள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை