உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலை ஒழிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு

ஊழலை ஒழிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர் என ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.பீஹாரில் நாளை ( நவம்பர் 11) 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: பீஹார் மக்கள் ஜாதி, மதம் மற்றும் பணத்தை கடந்து, ஒரு நல்ல சமூகத்திற்காக ஓட்டளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, பீஹாரில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.பீஹாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுலின் வருகை பீஹார் சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுலுக்கு மாநிலத்தைப் பற்றி தெரியாது. அவர் இங்கு சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் பீஹார் மக்கள் ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
நவ 10, 2025 20:33

அப்படிப் பார்த்தா நீயி கைகாட்டுன தி.மு.க.,வுக்கு ஒருத்தனும் ஓட்ட போட்டிருக்கக் கூடாது .....


ஜெய்ஹிந்த்புரம்
நவ 10, 2025 20:04

அதெல்லீம் கணக்கிலே சேர்த்துத் தான் எல்லாம் நடக்குது. 160 இடத்துல ஜெயிக்க போறதா அமீத்சா சொல்லிட்டாரு.


ganesan
நவ 10, 2025 19:38

கணக்கு ஒழுங்கா எடுத்த எல்லா தேர்தலையும் ஒட்டு சதவீதம் ஒழுங்கா இருக்கும் . செத்தவன் எப்பிடி வருவான் . எஸ் ஐ ர் எடுத்தாதான் ஒழுங்கா வரும்


kumaran
நவ 10, 2025 19:06

ஊழல்வாதிகளுக்கு வேலை பார்த்த போது இவர்களால் நாட்டு மக்களுக்கு நண்மை இல்லை என்று தெரியாதா? தவறு செய்பவனுக்கு துணை போவதும் தவறு தான் பணம் எல்லாம் சம்பாதித்த பின் ஞானமா


ஜெய்ஹிந்த்புரம்
நவ 10, 2025 20:34

எல்லா அரசியல்வாதிகளின் ஊழல் கணக்கை சரி செய்பவர் சீனியர் அவார்கள் தானே?


RAMESH KUMAR R V
நவ 10, 2025 17:25

காலம் பதில் சொல்லும்.


vadivelu
நவ 10, 2025 17:07

ஊழலை ஒழிக்க என்றால் இனி காங்கிரஸுக்கோ, தேஜஸ்விக்கோ வாய்ப்போ இல்லையா ?


புதிய வீடியோ