உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வரை சந்தித்த பின் திருமா பேட்டி

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வரை சந்தித்த பின் திருமா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது, நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்து உள்ளார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கவின் தந்தை சந்திரசேகரின் கோரிக்கைகளை முன் வைத்தேன்.

கூலிப்படைக்கு தொடர்பு

கவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புகளை வழங்க வேண்டும். தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அந்த கொலையில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அந்த கொலையில் குற்றவாளிகள் யாரும் தப்பித்து விடாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பார் என்று பெரிதும் நம்புகிறோம்.

தடுப்புச் சட்டம்

இந்த சந்திப்பில் ஆணவ கொலை தடுப்பு சட்டம் பற்றி பேசவில்லை. அது ஒரு அரசியல் கோரிக்கை. இப்போதைக்கு கவின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் பற்றி மட்டுமே பேசி இருக்கிறோம். ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்கனே சுட்டிக்காட்டி இருக்கிறோம். ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

joe
ஆக 26, 2025 16:27

அட தேவுடா உங்க வீட்ல சாப்பாடு சரி இல்லை என்று இப்படி பொது மக்களிடம் ரவுடித்தனம் பண்ணா மட்டும்தான் சாப்பாடு போடுவார்களா .


பேசும் தமிழன்
ஆக 26, 2025 08:31

இண்டி கூட்டணியில் இருந்து கொண்டு..... பெட்டி வாங்க தெரிந்த உங்களுக்கு..... சட்டம் இயற்றுங்கள் என்று கேட்கத் முடியாதா ???


M Ramachandran
ஆக 26, 2025 01:01

நீயெல்லாம் ஒரு அரசியல் வாதியாக வளம் வருவது வெக்க கேடு. கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த போது ஊரெ பொங்கி எழுந்தது அப்போது வாய் மூடி மௌனமாக இருந்து உன் சுய நல அடிமை சொரூபத்தை காட்டி விட்டாய். அதனால் தான் எஜமான் ப்ளாலிஸ்டிக் சேரை கொடுத்து அதில் உட்கார சொன்ன போது மௌனமாகயிருந்தாய்.


Raj S
ஆக 25, 2025 23:04

ஹா ஹா... உள்ள போயி கூழை கும்மிடு போட்டுட்டு, வெளில வந்து விறைப்பா பேட்டி குடுக்கறதெல்லாம், விவேக், வடிவேலு மாதிரி பல நடிகர்கள் பண்ணிட்டாங்க...


Nanchilguru
ஆக 25, 2025 21:24

இதை அவர்கிட்ட சொல்லலையா


சந்திரன்
ஆக 25, 2025 20:20

முதலில் உன் ஜாதிகாரனை கோட்டாவில் நன்றாக படித்து கோட்டாவில் அரசு பதவி வாங்கி நல்ல கைநிறைய சம்பாதித்து உன் ஜாதியில் உள்ள ஏழை பெண்ணை காதலித்து வாழ்க்கை தர சொல் ஆணவ கொலையும் இல்லை எந்த பிரச்சனையும் இல்லை


theruvasagan
ஆக 25, 2025 19:54

எல்லாம் வேண்டும்னு கேப்பீங்க. ஆனா வேங்கை வயலுக்கு மாத்திரம் வாயை தொறக்கவே மாட்டீங்க.


theruvasagan
ஆக 25, 2025 19:50

ஆணவக் கொலைக்கு ஒரு சட்டம். ஆவண கொலைக்கு ஒரு சட்டம். ஆத்திர கொலைக்கு ஒரு சட்டம். இவை எல்லாவற்றுக்கும் தனித்தனி சட்டம் வேணும்னு கேளுங்களேன். காசா பணமா.


M Ramachandran
ஆக 25, 2025 19:41

தமிழ் நாட்டின் அரசியலில் தேவையில்லாது நல்ல என்ன மில்லாத சுய நல வாதியின் கட்சியை தடை செய்ய வேண்டும்.


sengalipuram
ஆக 25, 2025 19:10

இது தான் பெரியார் மண் ஆச்சே ஆணவ கொலைகள் எப்படி ? எதுக்கு புதிய சட்டம் ? ஜாதி இன்னும் ஒழியவில்லை என்று தொல் வாக்குமூலம் கொடுக்கிறார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை