உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம்; பார்லி.,யில் பதிலடி கொடுக்க ஆயத்தம்

மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம்; பார்லி.,யில் பதிலடி கொடுக்க ஆயத்தம்

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் பார்லி., கூட்டம் டில்லியில் இன்று (ஜூலை 02) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பா.ஜ., எம்.பி.,க்கள், கூட்டணி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் லோக்சபாவில் நேற்று (ஜூலை 1) எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினரை விமர்சித்து பேசினார். இன்று விவாதத்துக்கு பதிலளித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.3வது முறையாக பதவியேற்றப்பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எம்.பி.,க்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று இரு அவைகளிலும் பதிலளிக்க உள்ள பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 02, 2024 13:41

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது "கருடா சவுக்கியமா?" "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சுவக்கியமே" கருடன் சொன்னது. இங்கு பரமசிவன் - பாரத தேசம். பாம்பு - மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு ராகுல் காந்தி - கருடன் திரு.மோடி. திரிசூலம் பாரத இராணுவம்.


RAGHUPATHY C V
ஜூலை 02, 2024 14:39

மதிப்பிற்குரிய மாண்புமிகு ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்.மாண்புமிகு இல்லை.


Apposthalan samlin
ஜூலை 02, 2024 11:22

நேற்று ராகுல் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறினர் . வலுவான எதிர்க்கட்சி ஜனநாயகத்துக்கு உகந்தது .


nagendhiran
ஜூலை 02, 2024 12:20

"அப்ப சிவனின்"அபய"முத்திரிக்கைக்குதான் தாங்கள்"வாக்கு போட்டிர்களா?


Tirunelveliகாரன்
ஜூலை 02, 2024 11:09

அடின்னாலும் அடி அப்படி ஒரு அடி. சந்தி சிரிக்க வைத்து விட்டார். இப்போது தான் தெரிகிறது நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் ராகுலை முடக்க முயற்சி செய்தீர்கள் என்று.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை