உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவத்துறையில் புது சாதனை: மொபைல்போனில் விளையாடிய நோயாளியின் மூளையில் கட்டியை அகற்றிய டாக்டர்கள்

மருத்துவத்துறையில் புது சாதனை: மொபைல்போனில் விளையாடிய நோயாளியின் மூளையில் கட்டியை அகற்றிய டாக்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த நேரத்தில் நோயாளி மொபைலை பயன்படுத்தி உள்ளார்.நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப அதிநவீன சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் உ.பி.,யின் லக்னோவில் உள்ள கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனை டாக்டர்கள் புது சாதனை ஒன்றை படைத்து உள்ளனர்.

பக்கவாத அபாயம்

லக்னோவை சேர்ந்த ஹரிஸ்சந்திரா பிரஜாபதி (56) என்பவர், கடுமையான தலைவலி, இடது கை மற்றும் கால்கள் பலவீனமான நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்ததுடன், இதனால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அவரை கல்யாண் சிங் புற்றுநோய் மையத்தில் அனுமதித்தனர்.

சிகிச்சை

அவருக்கு ' அவேக் கிரனியோடோமி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதன்படி, ஹரிஸ்சந்திரா பிரஜாபதிக்கு தலையில் மட்டும் 'அனஸ்தீசியா' மருந்தை செலுத்தி உணர்விழக்க செய்தனர். தொடர்ந்து மொபைலில் விளையாடவும், பேனாவை கையில் வைத்திருக்கவும் செய்த டாக்டர்கள், காலை அசைக்க செய்தனர். இதன் மூலம் நரம்பை கண்காணிக்கும் கருவியை பயன்படுத்தி கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து அதனை அகற்றினர். இதன் மூலம் நரம்பு பாதிப்பு ஏற்படும் பிரச்னையை தவிர்க்க முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kaliyaperumal Sinivasan
செப் 14, 2024 09:09

பராட்டுக்கு உரியவர்கள்


pattikkaattaan
செப் 13, 2024 23:36

மூளைக்கு வலி உணர்வு கிடையாது. அதை சரியாக பயன்படுத்தி உள்ளார்கள் மருத்துவர்கள்.


Mahendran Ganapathivel
செப் 13, 2024 19:24

உலகின்சிறந்தமருத்துவர்கள்இந்தியாவிலும்உண்டுஎன்பதைஇந்தநிகழ்வுஉறுதிப்படுத்துகிறது.


Sankar
செப் 13, 2024 13:15

அந்தக் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.


M R Sampath
செப் 13, 2024 06:16

மருத்துவத்தில் தமிழ் நாடுதான் சிறப்பாக செயல் படுவதாக கொக்கரிக்கும் திராவிட மாடல் தி மு க கவனத்திற்கு ஒரு விழிப்புணர்வு


shakti
செப் 12, 2024 18:23

நன்றி


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 12, 2024 15:37

உத்தரப் பிரதேசம்..... லக்னோ .... கவனிக்க


Senthilmurugan Nagamaiyan
செப் 12, 2024 14:57

சுபெர்ப்


சமூக நல விரும்பி
செப் 12, 2024 12:00

Congratulations to our Doctors team


சமீபத்திய செய்தி