உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மோதி பெண் பலி வழக்கில் புதிய திருப்பம்

கார் மோதி பெண் பலி வழக்கில் புதிய திருப்பம்

கெங்கேரி: குடிபோதையில் கார் ஏற்றி, பெண்ணை கொன்ற விபத்து வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.கெங்கேரி பஸ் நிலையம் அருகே, சந்தியா, 33, என்பவர், சாலையை கடக்க முயன்றார். அப்போது, பென்ஸ் கார் ஒன்று, அவர் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த தனுஷ், தப்பி ஓட முற்பட்டார். அங்கிருந்தோர், அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம், இம்மாதம் 2ம் தேதி நடந்தது.விசாரணையில், தனுஷ் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை மூடி மறைக்க தனுஷ் முயற்சி மேற்கொண்டதாக, சந்தியாவின் சகோதரர் குற்றஞ்சாட்டி உள்ளார்.சந்தியாவின் பெற்றோர், விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்குமாறு, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த காட்சிகளை வழங்குமாறு, போக்குவரத்து போலீசாருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை