உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியரின் வீடியோக்களை ஆபாச தளங்களுக்கு விற்ற வக்கிர கும்பல்: மருத்துவமனை சிசிடிவியை ஹேக் செய்தது அம்பலம்

சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணியரின் வீடியோக்களை ஆபாச தளங்களுக்கு விற்ற வக்கிர கும்பல்: மருத்துவமனை சிசிடிவியை ஹேக் செய்தது அம்பலம்

ராஜ்கோட்: குஜராத்தில், பிரபல மகப்பேறு மருத்துவமனையின், 'சிசிடிவி' காட்சிகளை, 'ஹேக்' செய்த ஆபாச கும்பல், கர்ப்பிணியர் வழக்கமாக பரிசோதனை செய்யும் தனிப்பட்ட காட்சிகளை, பணத்துக்காக ஆபாச தளங்களுக்கு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பரிசோதனை

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், பயல் மகப் பேறு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஹேக் செய்த ஆபாச கும்பல், கர்ப்பிணியரின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோக்களை திருடி உள்ளது. அந்த வீடியோக்களில், கர்ப்பிணியர், குழந்தைபேறுக்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள், மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது இடம் பெற்றுள்ளன. இவை, கடந்தாண்டு ஜன., - டிச., வரையிலான காலத்தில் சிசிடிவியில் பதிவானவை. பயல் மகப்பேறு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள், 'சி.பி.மோண்டா, மேகா எம்.பி.பி.எஸ்' என்ற, 'யு டியூப்' சேனல்களில் வெளியானதை தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. யு டியூப்பில் ஒருசில நிமிட வீடியோவை பார்த்தவர்கள், முழு வீடியோவை பார்க்க, 'டெலிகிராம்' சமூக ஊடகத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு, கர்ப்பிணியரின் அந்தரங்க வீடியோக்கள், 700 முதல் 4,000 ரூபாய் வரை விற்கப்பட்டு உள்ளன. புனே, மும்பை , நாசிக், சூரத், ஆமதாபாத், டில்லி உட்பட நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளின் சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டு, 50,000க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை ஆபாச கும்பல் திருடி உள்ளது.

பாஸ்வேர்ட்

இது மட்டுமின்றி, பள்ளிகள், பெரு நிறுவனங்கள், தியேட்டர்கள், தனியார் குடி யிருப்புகளின் பாதுகாப்பு அம்சம் இல்லாத சிசிடிவி காட்சிகளையும் அந்த கும் பல் ஹேக் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வக்கிரமான குற்றத்தில் ஈடுபட்டோர், கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டாலும், டெலிகிராமில், அந்த வீடியோக்கள் தற்போதும் கிடைப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான சிசிடிவி அமைப்புகள், இணைய தளத்தில் எளிதாகக் கிடைக்கக்கூடிய, 'அட்மின் 123' போன்ற எளிதான பாஸ்வேர்டை நீண்ட காலமாக மாற்றாமல் வைத்திருப்பதே, ஹேக் செய்ய காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. நிர்வாகக் கவனக் குறைவால், ஆயிரக்கணக்கான பெண்களின் தனி யுரிமை கேள்விக்குறியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
நவ 05, 2025 11:12

டபுள் இஞ்சின் சர்க்கார் சந்தி சிரிக்கிது.


KOVAIKARAN
நவ 05, 2025 10:11

புனே, மும்பை , நாசிக், சூரத், ஆமதாபாத், டில்லி உட்பட நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளின் சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டு, 50,000க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை ஆபாச கும்பல் திருடி உள்ளது, என்ற வரிகளை முழுவதுமாகப் படித்து புரிந்துகொள்ளாமல், குஜராத்தில் மட்டும் நடந்துள்ளது என்று கூறுவது, அபத்தம். நாடுமுழுவதும் என்றால், தமிழகத்திலும் ஹேக் செய்யப்பட்ட்டிருக்கலாம் என்று உங்களுக்கு ஏன் கூறத் தோன்றவில்லை? ஒருவேளை, தமிழகத்தில்வயது வித்தியாசமின்றி பெண்களையும், கல்லூரி மாணவிகளையும், கூட்டு பலாத்காரம் செய்வது என்ற செய்தி தான் வெளிவருகிறது என்ற உண்மையினாலா? எல்லாமே கொடிய குற்றங்கள்தான்.


AMMAN EARTH MOVERS
நவ 05, 2025 09:13

குஜராத் மாடல்


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 09:00

ஆக மொத்தத்தில் வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை கேட்டா தரமாட்டாங்க. ஆனா ஆஸ்பத்திரி அந்தரங்க விடியோ ரூ400 க்கு விக்கிறாங்க.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 08:55

அதெல்லாம் சரி, “கர்ப்பிணியர் வழக்கமாக பரிசோதனை செய்யும் தனிப்பட்ட காட்சிகளை” எதுக்காக அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் சிசிடிவி விடியோ எடுக்குறாங்க? புரியல்லியே. பிரச்சினை ஆஸ்பத்திரியில் இருந்து தான் ஆரம்பிக்குது. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.


Nandakumar Naidu.
நவ 05, 2025 08:33

They must be given capital punishment only.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 08:27

எப்படி பாஜக டபுள் எஞ்சின் ஓடுற எடத்திலே மட்டும் சம்பவம் நடந்துருக்கு?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 08:24

குசராத் மாடல்?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 05, 2025 08:08

நடந்தது குஜராத்துலதான்.. ஆனா குற்றவாளிகளின் பெயர்கள் வந்தா உண்மை புலப்படும் .......


Sudha
நவ 05, 2025 07:46

Telegram, youtube instagram, when are we going to thrash them ,


முக்கிய வீடியோ