உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛சேட்டான்கள் செய்த சேட்டை: பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி: மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள்!!

‛‛சேட்டான்கள் செய்த சேட்டை: பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி: மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள்!!

கொச்சி : முறைகேடாக சொகுசு வாகனங்களை பூடான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ‛ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் நடக்கும் இந்த ரெய்டு கேரளாவில் சுமார் 30 இடங்களில் நடந்தது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான். பிருத்விராஜ் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார். அதே போல் நடிகர் மம்முட்டியின் மகனான நடிகர் துல்கரும் நடிப்பு தாண்டி படங்களும் தயாரிக்கிறார். பொதுவாகவே மலையாள நடிகர்கள் சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், விதவிதமான வெளிநாட்டு உயர் ரக கார்களை பல நடிகர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் சிலர் பூட்டான் வழியாக ஆடம்பர வாகனங்களை முறைகேடாக இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதை தடுக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் ‛ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் சுங்க அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக கேரளாவில் மட்டும் 30 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இதில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்தது. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத வாகன இறக்குமதியில் இவர்கள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்படி இந்த ரெய்டை அதிகாரிகள் மேற்கொண்டனர். அவர்கள் வாங்கிய உயர் ரக வாகனங்கள் குறித்து சரிபார்ப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதே போல் தொழிலதிபர்கள் மற்றும் சில கார் ஷோரூம்களிலும் இந்த சோதனை நடக்கிறது. குறைந்த விலையில் பூடானில் ஏலம் விடப்பட்ட சொகுசு ரக வாகனங்களை முறையான வரி செலுத்தாமல் இந்தியாவிற்கு கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர வாகனங்கள் இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்காலிக முகவரிகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நிறைய வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vbs manian
செப் 23, 2025 21:02

திரையில் மட்டும் போராளிகள் சீர்திருத்தம் ஹீரோ எல்லாம். நிஜ வாழ்வில் எதிர்மறை.


Kalyanaraman
செப் 23, 2025 19:29

எந்த வாகனமும் ஆர்டிஓ பதிவு செய்யாமல் ஓட்ட முடியாது. அவ்வாறு இருக்க முதலில் பிடிக்க வேண்டியது ஆர்டிஓ ஆசாமிகளைத்தான். இவர்களுக்கு கடும் அபராதமும் தண்டனையும் கொடுத்தால் இதுபோன்று பதிவை செய்யவே மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக, நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஆண்மையும், முதுகெலும்பும் இல்லாத காரணத்தால் இவர்களை தண்டிக்க முடியாது. ஆதலால், இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.


Easwar Kamal
செப் 23, 2025 17:03

சேட்டன்கள் கொஞ்ச நாலா அடங்கி இருந்தார்கள். இப்போ மலையாள படங்கள் தமிழ் தெலுங்கை போல வசூல் வாரி குவிகிறது. அப்படி இருந்தும் IVANAUNGA புத்தி இன்னும் அடங்க வில்லையா. அந்த திருட்டு தோணி மூலம் GULF போன புத்தி இன்னும் இருக்கு. கொஞ்சம் அடங்குங்க சேட்டனுங்கள


Rathna
செப் 23, 2025 16:19

சினிமாவில் கம்யூனிச சித்தாந்தம். ஏகாதிபத்தியம் நடப்பதாக கூச்சல். உண்மையில் நடப்பது, சினிமால சண்டைபோடும் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் கிடையாது, இன்சூரன்ஸ் கிடையாது. சண்டையின் போது கை கால் உடைந்தால் கூட ஆஸ்பத்திரிக்கு கூட செலவு செய்யமாட்டான். அதுவும் சேட்டனுடைய நாட்டில் பெண் தொழிலாளர்கள் எவரையும் விட்டு வைக்க மாட்டான். அதிகம் சம்பாதிக்கும் நடிக நடிகையர் வருமான வரி காட்டுவதில்லை. எப்படி வரியை ஏய்க்கலாம் என்று பார்க்கிறான். ஆனால் மோடியை பற்றி வாய் கிழிய பேசுவான்.


Sivramkrishnan Gk
செப் 23, 2025 15:56

முடியாதே. யுவர் ஆனரும் வாங்கி இருப்பார். யாருக்கு தெரியும். நான் பயிற்சியில் இருக்கும்போது மோகன் குமாரமங்கலத்தின் ஜூனியர் ஒருவர் 50 வருடத்திற்கு முன் சொன்னார், வக்கீல் தொழிலில் 5000 ரூபாய் மாத சம்பாதிக்க முடியாதவன் தான் யுவர் ஆனர், My Lord பதவிக்கு போவார்கள் என்று. இன்று பணம் அங்கு தான் கொட்டோ கொட்டோ என்று கொட்டுகிறது.


அப்பாவி
செப் 23, 2025 14:32

அவிங்க என்ன பூட்டானிலிருந்தா வாங்கி ஓட்டிட்டு வந்தாங்க? இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்திலிருந்துதானே வாங்கினாங்க. வித்தவனைப் போய் புடிங்கய்யா.


கல்யாணராமன் சு.
செப் 23, 2025 16:21

சரி சரி நீங்க பர்மா பசார் ஆளா ? நல்லாவே புரியுது ....


beindian
செப் 23, 2025 14:16

பச்சபுள்ளைக்கு கூட தெரியும்


BHARATH
செப் 23, 2025 13:45

இங்கே ஜோசப் கூட பாண்டிச்சேரியிலேந்து இறக்குமதி பண்ணி வரி ஏய்ப்பு செய்தார். அப்புறம் அபராதம் காட்டினார் உத்தமர்.


கல்யாணராமன் சு.
செப் 23, 2025 16:23

அந்த வரியை கட்டறதுக்கு முன்னாடி. நீதி மன்றத்துக்குப் போய் எனக்கு வரி போடக்கூடாதுன்னு வழக்குப் போட்டு நீதியரசர் கிட்டே குட்டு வாங்கிட்டு அப்பறந்தான் வரியை கட்டினார் என்பது ஒரு போனஸ் தகவல் . ...


SUBRAMANIAN P
செப் 23, 2025 13:41

இவனுவோ கோடி கோடியா சம்பளம் வாங்குவானுவோ, ஒரு 25 லட்சம் வரி கட்டுறதுக்கு சட்டத்துல இருக்குற ஓட்டைய பயன்படுத்துவானுவோ.. இவனுவ படத்துல மட்டும் எல்லாருக்கும் பாடம் நடத்துவானுவோ.. பிடிச்சி ஜெயில்ல போடுங்க யுவரானர்..


Palanivelu Kandasamy
செப் 23, 2025 13:40

பூட்டானிலிருந்து இந்த வண்டிகள் பறந்து வந்தனவா? இவர்கள் கார் வாங்குவது ஷோ ரூமிலிருந்துதானே. அங்கே எப்படி கார்கள் வந்தன? தவறு நடந்திருந்தால், அதற்கு யாரெல்லாம் உதவி இருப்பார்கள்? இது என்ன திருட்டு நகையா, மறைத்துவைத்து விற்பதற்கும், அதை சேர்த்துவைப்பதற்கும்? இப்படித் தான் விஜய் காருக்கும் பிரச்சினை உண்டானது. ஒரு விதம் பார்த்தால் -விஜய், ப்ருத்விராஜ், துல்கர் எல்லாம் குறி வைக்கப்படுகிறார்கள்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 23, 2025 13:57

இதற்கெல்லாம் ஷோரூம் கிடையாது. செய்தியை நன்றாக படிக்கவும். பூட்டானில் குறைந்த விலைக்கு வாங்கி, ஹிமாச்சலில் ஒரு டம்மி முகவரியில் பதிவு செய்து, பின்னர் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதில் நடிகர்கள் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் ஹிமாச்சலில் இருந்து வாங்குவதாக நினைத்திருப்பார்கள். இதற்குப் பின்னால் உள்ள மர்ம மனிதர்களை பிடித்தால் போதும். பூட்டான் இந்தியா இடையே திறந்த எல்லை. சோதனைகள் கிடையாது, பாஸ்போர்ட், விசா தேவையில்லை.


கல்யாணராமன் சு.
செப் 23, 2025 16:28

இதில் நடிகர்கள் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. ... அவர்கள் தெரியாமல் வாங்கினார்கள் என்று சொல்கிறீர்களா ? price differential methodology என்ற முறையை கடைப்பிடித்தால் சுலபமாக தெரிந்துவிடும் இந்த வண்டிகள் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டனவா என்று . மற்றபடி கருத்து கந்தசாமி சொல்வதுபோல அவர்களை குறிவைக்கவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை . ... தப்பு செய்யறாங்க, மாட்டிக்கிறாங்க இல்லை தப்பிச்சுடுறாங்க ...


Ramesh Trichy
செப் 23, 2025 16:49

இந்த நடிகர்கள் தெரிந்து தான் வங்கியுள்ளார்கள். இது பெரிய நெட்ஒர்க். ஏன் சொகுசு கார்களை இமாச்சலத்தில் போய் வாங்க வேண்டும்?


புதிய வீடியோ