உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியை தாக்கிய வாலிபர்

அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியை தாக்கிய வாலிபர்

கும்பலகோடு: அடுக்குமாடி குடியிருப்புக்கு நள்ளிரவில் இரண்டு பெண்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த காவலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். முதல்வரின் உறவினர் என்று அந்த வாலிபர் பொய் கூறியது தெரிந்தது.பெங்களூரு, கும்பலகோடில் 'பிராவிடண்ட் சன் வொர்த்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு காவலாளியாக வேலை செய்பவர் புனித், 43. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்தார்.அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வருண், 28, என்பவர், காரில் இரண்டு இளம் பெண்களை தன்னுடன் அழைத்து வந்தார். “அடுக்குமாடி குடியிருப்பின் விதிகளின்படி நள்ளிரவில் வெளி ஆட்கள் வர அனுமதி இல்லை,” என, வருணிடம் புனித் கூறினார். ஆனால் வருண், “இளம்பெண்களை உள்ளே அழைத்துச் செல்வேன்,” என கூறினார்.இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த வருண், “நான் டி.சி.பி.,யின் மகன், முதல்வர் சித்தராமையாவின் உறவினர். என்னையே தடுக்க பார்க்கிறாயா? நான் நினைத்தால் உன்னை இப்போதே வேலையிலிருந்து காலி செய்வேன்,” என்று கூறி, புனித்தை தாக்கினார். பின், இரு இளம்பெண்களையும் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.இதுகுறித்து கும்பலகோடு போலீசில் புனித் புகார் செய்தார். நேற்று காலை வருண் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர், முதல்வரின் உறவினர் இல்லை என்பதும், டி.சி.பி., மகன் என்றும் பொய் சொன்னது தெரிய வந்தது.வருணின் தாய் விஜயலட்சுமி அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை