உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் விபரீதமான பந்தயம்: பட்டாசு வெடித்து வாலிபர் பலி

பெங்களூரில் விபரீதமான பந்தயம்: பட்டாசு வெடித்து வாலிபர் பலி

பெங்களூரு: பெங்களூரில் குடிபோதையில் பந்தயம் கட்டி பட்டாசு வெடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தீபாவளியன்று இரவு நவீன், தினகர், சத்யவேலு, கார்த்திக், சதீஷ், சந்தோஷ், சபரீஷ் ஆகிய இளைஞர்கள், குடிபோதையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்கள் இடையே பந்தயம் கட்டுவது தொடர்பாக விவாதம் ஏற்பட்டது. இதில், பட்டாசு மீது ஒரு பிளாஸ்டிக் டப்பாவை வைத்து, அதன் மீது அமர முடியமா என அவர்களுக்குள் சவால் விடுத்தனர்.முதலில் சபரிஷ் என்பவர், பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டார். பந்தயத்தில் வெற்றி பெற்றால், ஆட்டோவை பரிசாக வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்; நண்பர்களுக்கும் ஒப்புக் கொண்டனர்.அதன்படி பட்டாசு மீது பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்து, அதன் மீது சபரீஷ் அமர்ந்து கொண்டார். பட்டாசு வெடித்ததும், அவரது மர்ம உறுப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது. வலியால் துடித்த சபரீஷை, பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி, 2ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோனனகுன்டே போலீசார், நண்பர்கள் ஆறு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KayD
நவ 05, 2024 18:52

இவர்கள் செய்த காரியங்களுக்கு வருந்த தான் முடியும். சும்மாவே தான் பேச்சை தானே கேட்க மாட்டாங்க அப்படி இருக்கையில் மது அருந்தி இருந்தால் யார் பேச்சை கேட்க போறாங்க...


ديفيد رافائيل
நவ 05, 2024 12:22

இவனுங்க சாகட்டும். அறிவுரை சொன்னாலும் கேட்க மாட்டானுங்க


Ms Mahadevan Mahadevan
நவ 05, 2024 09:35

இவ்விதம் இளைஞர்கள் கெடுவதற்கக்கு மதுவே காரணம். மது விலக்கு. அவசர தேவை. அரசுகள் நடவடிக்கை எடுக்குமா?


Barakat Ali
நவ 05, 2024 12:39

மதுவை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.... ஆனால் இப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்திக்கவும் மதுதான் காரணமா ???? மனிதர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டாமா ????


முக்கிய வீடியோ