உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கத்தியால் குத்தி வாலிபர் கொலை

கத்தியால் குத்தி வாலிபர் கொலை

ரோகினி: விஜய் விஹாரில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.ரோகினியின் விஜய் விஹார் பகுதியில் புதன்கிழமை 28 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.விஜய் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 28. இவர், நிரங்காரி பவன் அருகே நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் நடந்து சென்றபோது, அவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தியது.படுகாயமடைந்த தீபக் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தீபக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாமென போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை