வாசகர்கள் கருத்துகள் ( 1 )
1000 நக்சல்கள் ஒரே நேரத்தில் சிக்கினார்கள் ,என்றால் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு இதுவரை நம் படை என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது
ராய்ப்பூர்: நாட்டின் மிகப்பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் படை வீரர்கள் 20 ஆயிரம் சேர்ந்து நக்சல்கள் ஆயிரம் பேரை சுற்றி வளைத்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. மத்திய அமைச்சர் அமித் ஷா, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் செயல்பாடுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=urpqseom&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த போலீசார், துணை ராணுவப்படையினர் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 20 ஆயிரம் பேர் நடத்தி வரும் இந்த தேடுதல் வேட்டைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.வனப்பகுதியில் தப்பிக்க வழியில்லாத இடத்தில் நக்சல்கள் ஆயிரம் பேர் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 48 மணி நேரமாக இப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. நக்சல்கள் தரப்பில் முன்னணி தலைவர்களான ஹித்மா, தேவா ஆகியோர் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்தாண்டில் மட்டும் சத்தீஸ்கரில் நக்சல்கள் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.3 பேர் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ரேகுட்டா என்ற வனப்பகுதியில், நக்சல்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1000 நக்சல்கள் ஒரே நேரத்தில் சிக்கினார்கள் ,என்றால் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு இதுவரை நம் படை என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது