உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிகவும் சிறப்பு வாய்ந்த ஜி20 உச்சி மாநாடு; டில்லியில் இருந்த புறப்பட்ட மோடி பதிவு

மிகவும் சிறப்பு வாய்ந்த ஜி20 உச்சி மாநாடு; டில்லியில் இருந்த புறப்பட்ட மோடி பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுவதால், மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில், பங்கேற்க டில்லியில் இருந்து மோடி புறப்பட்டு சென்றார்.தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நவ.21ம் தேதி முதல் நவ.23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.இந்நிலையில், இன்று (நவ.,21) காலை டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன். ஆப்ரிக்காவில் நடைபெறுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு. பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Field Marshal
நவ 21, 2025 08:49

ட்ரம்ப் போகாத நிகழ்ச்சிகளுக்கே செல்கிறார் ..எவ்வளவு நாள் ஆடு புலி ஆட்டம் ?


Pandi Muni
நவ 21, 2025 09:27

பொய்யா சொல்லிக்கிட்டு திரியிறான்


மேலும் செய்திகள்