உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயதை தீர்மானிக்க ஆதாரை ஆவணமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வயதை தீர்மானிக்க ஆதாரை ஆவணமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி:: ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை அதிகார ஆவணமாக கருத முடியாது என, விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இழப்பீடு தொடர்பான அப்பீல் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c1le1ww5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கி கணக்கு துவங்க, சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற, பத்திரப்பதிவு, மொபைல் சிம்கார்டு பெற உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அவசியமாக உள்ளது.இந்நிலையில் 2015ம் ஆண்டு, ஹரியானாவின் ரோதாக்கை சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் உயிரிழந்தவரின் பள்ளி சான்றிதழில் 01.10. 1970 என்ற பிறந்த தேதியை வைத்து ரூ.19,35,000 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயிரிழந்தவரின் ஆதாரில் 01,01. 1969 என உள்ள பிறந்த தேதியை வைத்து இழப்பீட்டு தொகையை ரூ. 9,22,000 ஆக குறைத்து தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் இரு தரப்பு வாதங்களை கேட்டனர்.அவர்கள் அளித்த தீர்ப்பு, 2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டம் 94-வது பிரிவின் படி பார்த்தால், பள்ளி இறுதி (எஸ்.எஸ்.எல்.சி.,) சான்றில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில் தான் ஒருவரது வயது தீர்மானிக்கப்பட வேண்டும். ஆதார் அட்டை, ஒருவரை பற்றிய அடையாளத்தை உறுதி செய்யவே பயன்படுத்த முடியும். பிறந்த தேதியை ஆதாரமாக கருத முடியாது.இதன்படி ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் ஆவணம் அல்ல. இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள் பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.******************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 25, 2024 13:46

ஆதார் ஒருவரின் அடையாளம் என்றால் பிறந்த தேதியும் அதே அடையாளம் தானே. பிறந்த தேதி இல்லாமல் எப்படி ஒருவரின் அடையாளம் முழுமையடையும். மாண்புமிகு கோர்ட்டார் அவர்கள் செக் ரிட்டர்ன் ஆகிவிட்டது என்று வங்கி மேலாளர் தரும் ஆவணம் அதற்கான சான்று வங்கி பதிவுகளில் இருந்தால் கூட கணம் கோர்ட்டார் நம்ப மாட்டார்கள். வருட கணக்கில் வாய்தா கொடுத்து கடைசியில் லோக் அதாலத் வழக்கை முடித்து கொள்ள வக்கீல்கள் மூலமாக அழுத்தம் கொடுத்து வழக்கை முடித்து கொள்வார்கள். வக்கீல்களும் ஒரே கிளையன்டை பல வருடங்களாக பார்த்து சலித்து போய் லோக் அதாலத் கொண்டு போவர். செக் ரிட்டர்ன் கேஸையே விசாரிக்க தெரியாத கணம் கோர்ட்டார்கள்.


அப்பாவி
அக் 25, 2024 08:51

தப்பு பண்ணிட்டாரு. அதே டுபாக்கூர் ஆதார் கார்டை வெச்சு பாஸ்போர்ட் வாங்கியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. அது செல்லும்.


அப்பாவி
அக் 25, 2024 08:48

அப்போ ஆதாரில் ஏன் பிறந்த தேதியைப் போடறீங்க மங்குணிகளா? இந்த டிசைனுக்கு பத்ம விருதெல்லாம் குடுத்தாங்க.


அப்பாவி
அக் 25, 2024 08:46

அப்போ ஆதாரில் தவறான தேதியை போட்டு அட்டை வழங்கிய டுபாக்கூர்களை என்ன செய்வது?


GMM
அக் 25, 2024 07:43

பள்ளி இறுதி சான்றில் பிறந்த ஆண்டு 70 என்று இருக்கும் போது ஆதாரில் 69 என்று வயதை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? பிறப்பு சான்று எங்கே? ஆதார் எண் கொண்டு தான் வங்கி கணக்கு. இழப்பீடு தர கூடாது. அல்லது ஆதார் தேதி அடிப்படையில் இழப்பீடு தான் இங்கு பொருந்தும். வயதை தீர்மானிக்க வழக்கு இல்லை. இழப்பீடு வழக்கு.


Kasimani Baskaran
அக் 25, 2024 05:10

காங்கிரஸ் இந்தியாவை ஒரு அடையாளம் இல்லாத நாடக வைத்திருந்ததால் பலன்தான் இது. ஒருவரது பிறந்த தேதியைக்கூட உறுதி செய்ய முடியாத நிலை மிக பரிதாபமானது.


Rajinikanth
அக் 25, 2024 05:04

ஆதார் வயதுக்கான சான்று அல்ல என்று ஆதார் அட்டையிலேயே போட்டிருக்கும். இதற்கு ஒரு வழக்கா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை