உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டளிக்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: தலைமை தேர்தல் கமிஷன்

ஓட்டளிக்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: தலைமை தேர்தல் கமிஷன்

புதுடில்லி:'ஓட்டளிக்க ஆதார் அட்டை கட்டாயமில்லை' என தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. திரிணமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி.,க்கள், தலைமை தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தனர். ராஜ்யசபா எம்.பி.,க்கள் சுகேந்து சேகர் ரே, டோலா சென், சாகேத் கோகலே, லோக்சபா எம்.பி.,க்கள் பிரதீமா மோண்டல், சஜ்தா அஹமது ஆகியோர் மேற்கு வங்கத்தில் ஏராளமான மக்களின் ஆதார் அட்டை செயலிழந்தது குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தனர். லோக்சபா தேர்தலில் அவர்கள் ஆதார் அட்டையின்றி ஓட்டளிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகேந்து சேகர் ரே கூறுகையில், ''ஓட்டளிக்க ஆதார் அட்டை கட்டாயமில்லை என தேர்தல் கமிஷன் உறுதியளித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து ஓட்டளிக்கலாம் என்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ