உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்

அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: அசாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி, மேலும் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அசாம் அரசு விளக்கம் அளித்துள்ளது. பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஆதார் அடையாள அட்டை வழங்க அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, “இதுவரை, ஆதார் அட்டை பெறாத பிற சமூகத்தினருக்காக செப்டம்பரில் சிறப்பு முகாம் நடத்தப்படும்,” என கூறியுள்ளார். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், மாவட்ட போலீஸ் உயரதிகாரியை அணுகி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மற்றும் வெளிநாட்டினர் தீர்ப்பாய அறிக்கையுடன், ஆதார் விண்ணப்பதாரரின் விபரங்களை சரிபார்த்த பிறகே, அடையாள அட்டையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanns
ஆக 22, 2025 09:47

Confirm Citizenship Only by Extensive NRC. Simply Abolish All ModiMental Aadhar &Aadhar Linked ID-Address etc Documents-Services, Billions of Foreign Muslim Infiltrators Will Become Illegals for Throwing Out by Whatever Means. No Mercy Required


Padmasridharan
ஆக 22, 2025 05:50

அரசியலாட்டம், மக்களை வோட்டு போடுவதற்கு மட்டும்தான் பயன்படுத்துகின்றது என்பது இந்த மாதிரி விளையாட்டுகளில் நிரூபணமாகிறது சாமி.


சமீபத்திய செய்தி