உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் மன்னிப்பு கேட்டார் நடிகர் அமீர் கான் சகோதரர்

இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் மன்னிப்பு கேட்டார் நடிகர் அமீர் கான் சகோதரர்

மும்பை: தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அமீர் கானின் சகோதரரும் நடிகருமான இம்ரான் கான், ‘இனி போராட்டங்களில் ஈடுபடமாட்டேன்’ என, மும்பை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

நோட்டீஸ்

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக தேர்தல் கமிஷனை கண்டித்து, கடந்த அக்., 10ல் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போராட்டம் நடந்தது. இதில், பாலிவுட் நடிகர் அமீர் கானின் சகோதரரும், நடிகருமான இம்ரான் கானும் பங்கேற்றார். அமெரிக்கரான அவர், இந்தியர் போல போராட்டத்தில் ஈடுபட முடியாது எனவும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறி, அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து இம்ரான் கான் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு தலைமை நீதிபதி எம்.சி.திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீங்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இந்திய குடிமகனை போல நீங்கள் நடந்து கொள்ள முடியாது.

உரிமை

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்திய குடிமகன் ஒருவர், அமெரிக்காவில் இதே போல, அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால், அடுத்த விமானத்திலேயே அவரை ஏற்றி தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பர். இந்திய அரசின் கருணை காரணமாகவே, வெளிநாட்டினர் இங்கு வசிக்கின்றனர். இந்தியாவில் வசித்து கொண்டே, இந்திய அரசை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மன்னிப்பு கடிதம் வழங்கியது மட்டுமே வழக்கு முடிந்து விட்டது என்பதாகி விடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, ‘நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இனி எந்தவொரு போராட்டத்திலும் பங்கேற்க மாட்டேன். யாரையும் துாண்டிவிட மாட்டேன்’ என, உறுதிமொழி பிரமாண பத்திரத்தை நடிகர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம், இந்தியாவை விட்டு வெளியேறும் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, விசாரணையை டிச., 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venkata Krishnan
நவ 04, 2026 12:28

இது போன்று கரப்பான் பூச்சி கட்சி தலைவரையும் பிடித்து, முட்டிக்கு முட்டி தட்டி எழுதி வாங்கினால்தான் மத்திய ஆட்சி நிம்மதியாக செய்யலாம்.


VENKATASUBRAMANIAN
நவ 03, 2026 08:09

நாடு கடத்த வேண்டும். இதுதான் சரியான தண்டனை


Vaduvooraan
நவ 03, 2026 06:40

மன்னிப்பு கேட்டதால் விஷயம் முடிந்துவிட்டது என்று கருதினால் அது வழக்கமான ஹிந்துக்களுக்கே உரித்தான மெத்தனம்..முட்டாள்தனம் வந்த வேலை நிறைவடையவில்லை.. அல்லது இங்கிருந்து கொண்டு இன்னும் நிறைய நாச வேலைகளில் ஈடுபட அவகாசம் தேவை..அதனால்தான் மன்னிப்பு கேட்டிருக்கிறான். கையும் களவுமாக பிடிபட்டாலுமே கூட அதற்கு ஏதாவது வியாக்கியானம்


Dr. Suriya
நவ 03, 2026 06:10

இந்தியாவை விட்டு அடித்து விரட்டுங்கள்....


நிக்கோல்தாம்சன்
நவ 03, 2026 05:25

முஸ்லீம் நாடுகள் போன்று தண்டனை கொடுத்திருக்க வேண்டும் ஓமான் போன்று நாடுத்தெருவில் முட்டியிட வைத்து , சவுதி போன்று ஒரு முல்லாவிடம் கத்தி கொடுத்து தலையை சிதைத்தது , பங்களாதேஷ் போன்று இவன் வீட்டு பெண்களின் உள்ளாடை முதற்கொண்டு திருடும்வகையில் , பாகிஸ்தான் போன்று கொன்று போட்டுவிட்டு யார் செய்தார்கள் என்று சொல்லாமல் விடுவதும் நன்றே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை