உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டி. கூட்டணிக்கு டாட்டா காட்டிய ஆம் ஆத்மி: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இண்டி. கூட்டணிக்கு டாட்டா காட்டிய ஆம் ஆத்மி: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; இண்டி கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டோம், 2024 லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே கூட்டணியில் இணைந்தோம் என்று ஆம் ஆத்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பஹல்காம் தாக்குதல் பற்றி விவாதிக்க பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள 16 கட்சிகள் பிரதமருக்கு கடிதமும் எழுதின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ziaboa03&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி பிரதமர் மோடிக்கு தனியாக கடிதம் எழுதியது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடியே பார்லிமெண்ட் கூட்டத்தொடர் நடைபெறும், முன்னதாக கூட்டத்தொடர் கூடாது என்று எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை மத்திய அரசு நிராகரித்தது. இந் நிலையில் இண்டி கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகிவிட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் ஊடக பொறுப்பாளர் அனுராக் தண்டா சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது; திரைக்குப் பின்னால் தான் பா.ஜ., காங். இடையே கூட்டணி உள்ளது. பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக நன்மை பயக்கும் விஷயங்களை மட்டுமே ராகுல் செய்கிறார். அதற்கு பதிலாக, ராகுல், சோனியா குடும்பங்களை சிறைக்கு செல்வதில் இருந்து காப்பாற்றுகிறார். மக்களுக்குத் தேவையான கல்வி, இட ஒதுக்கீடு, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நாட்டு மக்களுக்கு தருவதில் இருவருமே ஆர்வம் காட்டவில்லை. நாட்டின் அரசியலை சுத்தப்படுத்த, திரைக்கு பின்னால் கூட்டணி வைத்துள்ள இந்த கட்சிகளின் கூட்டுச்சதியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். ராகுல், மோடி இருவரும் மேடைகளில் வேண்டுமானால் எதிரிகளாக தோன்றலாம். அரசியலில் நீடிக்க இருவரும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து உத்தரவாதம் அளிப்பவர்களாக மாறிவிட்டனர். காங்கிரசின் பலவீனமான அரசியல் பா.ஜ.,வை அதிகாரம் செய்கிறது. அதேநேரத்தில் பா.ஜ., ஆட்சி காங். ஊழலை மறைக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

பேசும் தமிழன்
ஜூன் 05, 2025 11:48

கான் கிராஸ் கட்சி ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்து விட்டு..... பிறகு அதே கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கூத்து அடித்தால்.... மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.. அதனால் தான் தேர்தலில் ஆப்பு அடித்து விட்டார்கள்.... இப்போது தான் இவருக்கு புத்தி வந்து இருக்கிறது போல் தெரிகிறது.


ramesh
ஜூன் 04, 2025 21:50

இவர் இருக்கும் இடம் வெளியில் இருக்கும் ஓணானை பிடித்து வேட்டிக்குள் விடுவதற்கு சமம் . தானும் படுக்க மாட்டான் . மற்றவர்களை படுக்கவும் விடமாட்டான் என்ற கருத்துக்கு அப்படியே சொந்த காரர் இந்த கெஜ்ரிவால்


தமிழ்வேள்
ஜூன் 04, 2025 19:54

இட ஒதுக்கீடு மக்களின் முக்கிய தேவை என்று பிதற்றுவதிலேயே இவனுங்களின் களவாணி தனம் நன்றாக புலப்படுகிறது


தாமரை மலர்கிறது
ஜூன் 04, 2025 19:05

போன தேர்தலில் தோற்றவுடனே இண்டி கூட்டணி இடிந்துவிட்டது.


Indhuindian
ஜூன் 04, 2025 18:13

ஆடி மோடி காத்துலே அம்மியும் குஷவியுமே பறக்குதாம் இளவன்பஞ்சு கதை என்ன ஆகும்


Indhuindian
ஜூன் 04, 2025 18:10

இவரு இன்னும் அரசியலிலே இருக்காரா? டெல்லி அசெம்பிளி தேர்தலுக்கு அப்புறம் சவுண்டையா காணோமே. சாராய வூஷல் காசை என்னைக்கொண்டு இருக்கிறாரா


Ramesh.M
ஜூன் 04, 2025 17:32

அப்போ எங்க பப்பு எப்போது பிரதமர் ஆவது?... இந்தியா எப்போது வல்லரசு ஆவது? .. எங்க கனவு எல்லாம் கானல் நீரா?


Abdul Rahim
ஜூன் 04, 2025 18:30

சாணி புத்தி


N Srinivasan
ஜூன் 04, 2025 16:33

இந்த கூட்டணி என்பது கவலைக்கிடத்தில் உள்ள ஒரு நோயாளியைப்போல. நோயாளியின் உடலில் ஒவ்வொரு பாகம் செயல் இழப்பது போல ஒவ்வொரு கட்சியும் வெளியே வரும்.


Abdul Rahim
ஜூன் 04, 2025 16:28

நீ இந்தியா கூட்டணியில் இருந்து மட்டும் என்ன சாதிச்ச ? போய் தொலைந்தது சனியன் ....


Kumar Kumzi
ஜூன் 04, 2025 16:27

அடடடா இண்டி கூட்டணி கூட்டணியாச்சே விடியாத விடியல் ஹீஹீஹீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை