உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் சபாநாயகர் அப்துல் ரஹீம்ராதர்! ஒருமனதாக தேர்வு

ஜம்மு காஷ்மீர் சபாநாயகர் அப்துல் ரஹீம்ராதர்! ஒருமனதாக தேர்வு

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரின் சபாநாயகராக தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம்ராதர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஜம்முகாஷ்மீரில் சட்டசபை முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது சபாநாயகர் பதவிக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வான அப்துல் ரஹீம்ராதர் பெயரை வேளாண் அமைச்சர் ஜாவத் அகமத் தார் முன் மொழிந்தார். வேறு யாரும் போட்டியிடாததால் அவரே சபாநாயகராக ஒருமனதாக தேர்வானார்.இது குறித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியிருப்பதாவது: சபாநாயகர் பதவிக்கு ஒருமனதாக தேர்வாகி உள்ளீர்கள். உங்களுக்கு எதிராக ஒருவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. நீங்கள் இப்போது சபையின் பாதுகாவலராக மாறிவிட்டீர்கள் என்று கூறினார்.தொடர்ந்து, அப்துல்ரஹீம் ராதரை முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா இருவரும் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை