உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வி.ஐ.பி.,க்களுக்காக மட்டும் நடைபாதை கடையை அகற்றுவதா

வி.ஐ.பி.,க்களுக்காக மட்டும் நடைபாதை கடையை அகற்றுவதா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : 'வி.ஐ.பி.,க்கள் வரும்போது மட்டும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்போது, மற்றவர்களுக்காக ஏன் செய்யக் கூடாது' என, மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நடைபாதைகள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்படும் பிரச்னை தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற அமர்வு, மாநில அரசு வழக்கறிஞரிடம் கூறியுள்ளதாவது:பிரதமர் அல்லது பிற வி.ஐ.பி.,க்கள் வரும்போது, நடைபாதை கடைகளை அகற்றுகிறீர்கள். ஆனால் அதன்பின், அவை மீண்டும் முளைத்து விடுகின்றன. ஒரு நாள் செய்யும் இந்த நடவடிக்கையை ஏன் தொடர்ந்து செய்யக் கூடாது.நடைபாதை நடப்பதற்கே; அதில்தான் நடந்து செல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறோம். ஆனால், நடைபாதைகளே இருப்பதில்லை.இருக்கும் நடைபாதைகளும் முழுதுமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.சாலைகளும், நடைபாதைகளும் தனிமனித உரிமையாகும். அதை அனைத்து தரப்பினரும் உரிய முறையில் பயன்படுத்த வாய்ப்பு தரப்பட வேண்டும்.ஆனால், தற்போது, எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அபராதம் விதிப்பதால், இதில் தீர்வு காண முடியாது. உங்களுடைய அபராதத்தைவிட அதிகளவில் அவர்கள் சம்பாதிக்கின்றனர்.இதில் உறுதியான, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராஜன்
ஜூன் 25, 2024 00:22

இந்த பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடைபாதையிலிருந்து கீழே இறங்கி ரோட்டில் நடந்துசெல்லும் அபாயம் உள்ளது. இதைபற்றி யாருக்கும் கவலை கிடையாது. முக்கியமான ரோட்டில் இந்தியாமுழுவதும் இது பார்க்கலாம். இதனால் நடைபாதை வியாபாரிகளை விட அந்த ஏரியாவின் பலம் மிகுந்த அரசியல்வாதிதான் பயனடைகிறார்கள்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 24, 2024 22:56

திருச்சியில் தெப்பக்குளம், மலைக்கோட்டை சுற்றுப்பகுதிகள் அனைத்தும் நடை பாதை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு, முக்கியமாக அமைதி மார்க்க மக்கள் அதிகம்.


GMM
ஜூன் 24, 2024 22:03

நடை பாதை, தள்ளுவண்டி... போன்ற கடைகள் மக்கள் கூடும் பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிகம். ஏழைகள் பிழைக்க வேண்டும் என்பது ஆளும் அரசியல்வாதி நீலி கண்ணீர். தேசம் முழுவதும் இதனை அகற்ற வேண்டும். வியாபாரிகள் நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்வர். அரசியல் கட்சிக்கு பலன் அதிகம். எந்த வித சட்ட விரோதமான செயலுக்கும் ஓட்டுரிமை இல்லை என்றால், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த முடியாதா?


தேஷ்பாண்டே
ஜூன் 24, 2024 21:55

ஜட்ஜுங்க செம தமாஷு....


வேலையில்லா பட்டதாரி
ஜூன் 24, 2024 21:54

வி.ஐ.பி க்களை தினமும் அந்தப்.பாதையில் வரச்சொல்லுங்க பாப்பம் யுவர் ஆனர். தினமும் வர்ரவன் வி.ஐ.பி கிடையாது.


krishnamurthy
ஜூன் 24, 2024 21:43

சென்னையிலும் இந்த பிரச்சினை உள்ளது


மேலும் செய்திகள்