உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

ஆல்வார்: '' நாட்டில் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடந்த நிகழ்ச்சியில்அவர் பேசியதாவது: நாட்டில் இருந்து தீண்டாமையை முற்றிலும் அழிக்க வேண்டும். சமூகத்தின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு இதனை ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றத்தை உருவாக்க சமூக நல்லிணக்கம் மிகவும் முக்கியம்.சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப விழிப்புணர்வு, ஒழுக்கம் ஆகியவற்றை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனை தொண்டர்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றும் போது சமூகமும் இதனை பின்பற்றும். ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாகி அடுத்த ஆண்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அமைப்பின் தொண்டர்கள், தங்கள் செய்யும் பணியின் நோக்கமத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். தங்களது கடமையை செய்யும்போது அந்தக் கொள்கைகளை எப்போதும் மனதில் வைத்து இருக்க வேண்டும். நமது நாடு வலிமைப் பெற வேண்டும்.அனைவரும் தண்ணீரை சேமிப்பதுடன், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். மரக்கன்று நட வேண்டும், தோட்டங்கள் அமைத்து உங்களது வீடுகளை பசுமையானதாக மாற்ற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை மறக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் வாரம் ஒரு முறை ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதுடன், சமூகத்திற்கு சேவை செய்வது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார். பிறகு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை