உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதியதாக வாங்கப்படும் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுடன் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.நாட்டில் சாலை விபத்துகளை குறைத்து, வாகன ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சில பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உத்ரவிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி முதல் விற்பனையாகும் அனைத்து வகை இரு சக்கர வாகனங்களுடன் கட்டாயமாக, இந்திய தர நிர்ணயத்தால் (BIS) சான்றளிக்கப்பட்ட 2 ஹெல்மெட்டுகளை வழங்கவேண்டும் என்று கூறி உள்ளது.இதேபோன்று ஏபிஎஸ் (ABS) என்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பிரேக் அமைப்புகள் பொருத்தப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.இந்த புதிய விதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அமைச்சகம் விரைவில் வெளியிடும். நாடு முழுவதும் மொத்தமாக பதிவாகும் சாலை விபத்துகளில் இறக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் 44 சதவீதம் பேர். மேலும் தற்போது 125 CCக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே ABS பாதுகாப்பு கட்டாயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சூரியா
ஜூன் 21, 2025 07:08

இது நான்கு சக்கர வாகனம் வாங்கும்பொழுது fast tag ஐத் தலையில் கட்டுவது போன்றது. யானை வாங்குபவனுக்கு அங்குசம் வாங்கத் தெரியாதா?


Sakshi
ஜூன் 20, 2025 20:26

போலீஸ் கொள்ளையடிக்கறதுக்கான வழி தான்


Ramesh Sargam
ஜூன் 20, 2025 22:06

பல இடங்களில் போலீஸ்காரர்களே ஹெல்மெட் அணிவதில்லை.


தமிழ்வேள்
ஜூன் 20, 2025 19:56

100சிசி திறனுக்கு மேற்பட்ட பைக், ஸ்கூட்டர் வகைகள் பாரதத்துக்கு தேவையில்லை... அதிகபட்ச வேகம் 60 கிமீக்கு மிகாமல் தயாரிப்பு நிலையில் கட்டுப்பாடு செய்ய வேண்டும்....இலகு ரக & கனரக வணிக போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம் பெற பத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் என்ற கட்டாய விதி மற்றும் இரண்டு மொழிகளில் எழுத பேச வேண்டும் என்ற விதியும் கட்டாயமாக்கப்பட வேண்டும்... குடித்து விட்டு வாகனம் ஓட்டும் பயல்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது நல்லது..


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 18:17

கெட்ட பெயர் மட்டுமே கிடைக்கும். பலர் வணிகப் பயன்பாடு சரக்குகளை எடுத்துச் செல்ல வண்டி வாங்குகிறார்கள். அவ‌ர்களு‌க்கு இரண்டாவது ஹெல்மெட் அநாவசிய செலவு. (இங்கு தேர்தலை ஒட்டி ஹெல்மெட் அணியாகலும் மூன்று நான்கு பேர் ஒரே வண்டியில் செ‌ல்வது போன்ற குற்றங்களை கண்டும் காணாமல் விட்டு விடும்படி மேலிட வாய்வழி உத்தரவாமே. வாக்கு வங்கி?)


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை