ஐதராபாத் பல்கலை தேர்தல்: ஏபிவிபி அபார வெற்றி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: டில்லி பல்கலையைத் தொடர்ந்து ஐதராபாத் பல்கலைக்கு நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் அனைத்து பதவிகளையும் பாஜவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கு நேற்று முன்தினம்( செப்.,19) மாணவர் சங்க தேர்தல் நடந்தது. இதில் 169 பேர் போட்டியிட்டனர். 81 சதவீத மாணவர்கள் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். இதில் ஏபிவிபி அமைப்புக்கும், இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற எஸ்எப்ஐ, தேசிய மாணவர்கள் சங்கத்தினர் இடையே நிலவியது.இதில், தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், கலாசாரப்பிரிவு செயலாளர், விளையாட்டுப்பிரிவு செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்றவர்கள் விபரம்:பிஎச்டி மாணவர் சிவா பலேபு தலைவராகவும்தேபேந்திரா துணைத்தலைவராகவும்ஸ்ருதி பிரியா பொதுச்செயலாளராகவும்சவுரப் சுக்லா இணைச்செயலாளராகவும்வீனஸ் கலாசாரப் பிரிவு செயலாளராகவும்ஜூவாலா விளையாட்டுப் பிரிவு செயலாளராகவும் வெற்றி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி மற்றும் பன்டி சஞ்சய் குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.