உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு

கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு

சிக்கமகளூரு: டாக்டர்களின் அலட்சியத்தால், கர்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிக்கமகளூரு கடூரின் சகராயபட்டணாவின், மடிகே ஹொசள்ளி கிராமத்தை சேர்ந்த ஷில்பா, 24, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன் தினம் காலை, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், குடும்பத்தினர் சிக்கமகளூரு நகரின், அரசு மகப்பெறு மருத்துவமனையில் சேர்த்தனர்.டாக்டர்கள் சரியான நேரத்தில் அவருக்கு பிரசவம் பார்க்கவில்லை. மாலையில் கர்ப்பிணியை பரிசோதித்த டாக்டர்கள், 'குழந்தை வளர்ச்சி அடையவில்லை. ஆப்பரேஷன் செய்ய வேண்டும்' என, கூறினர். நேற்று காலை ஆப்பரேஷன் செய்த போது, குழந்தை வயிற்றிலேயே இறந்தது தெரிந்தது.மருத்துவமனைக்கு வந்தவுடன், ஷில்பாவுக்கு பிரசவம் பார்த்திருந்தால், குழந்தை உயிருடன் இருந்திருக்கும். டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக, குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். 'டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி