உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருக பெருமான் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார். ஆனால் அதை நிறைவேற்றாத தமிழக அரசு, மேல்முறையீடு செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l1hl6gu6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு - ஹிந்து அமைப்புகள் இடையே மோதல் வெடித்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், ஹிந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட, 56 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.இந்த சூழலில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது: நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட ஆளும் திமுக ஆதரவு கட்சிகளைச் சேர்ந்த தனிநபர்கள், சில வழக்கறிஞர்களுடன் சேர்ந்து, பொது இடங்களில் சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்களை நடத்தினர். நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசும், போலீசாரும் தவறிவிட்டனர். இது போன்ற செயல்களுக்குப் பொறுப்பான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

S.jayaram
டிச 16, 2025 08:37

திமுகவினர் நோக்கம் தீபம் ஏற்ற கூடாது அது நிறைவேற்றியாச்சு, இனிமேல் சமாளிச்சுக்கலாம் வக்கில் பீஸ் திமுகவா கொடுக்கப்போகிறது மக்களின் வரிப்பணம் வீணாகிப்போகிறது அதைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை உழைத்து சம்பாதித்து வரி கட்டினால் தெரியும் வலி. யாரோ இழித்தவாயர்கள் கட்டுகிறார்கள் எனவே அதைப்பற்றி கவலை இல்ல என்ற எண்ணம்


Ravi Kulasekaran
டிச 16, 2025 08:15

நீதி துறையை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஆளும் கட்சிக்கு துணிச்சல் வந்து இருப்பது வேதனை கூறியது இந்துமதம் இந்தியர்களில் பெரும்பாலோர் மக்களின் மதமாகும் இதனை திட்டமிட்டு சில தீயசக்திகள் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளை ஆரம்பத்திலே அழிக்க தவறிய தன் பின் விளைவு தான் இது


Rajendra Kumar
டிச 16, 2025 05:46

திமுக வின் ஆட்சி என்றாலே ரவுடிகள் ஆட்சி தான் கருணாநிதி காலத்திலிருந்தே. திமுக கட்சிக்காரர்களுக்கு எது வேண்டுமோ...அது அவர்களுக்கு நீதி. காரணம்... சொரணையில்லாத இந்துக்கள், காசுக்கு ஓட்டு போடும் அறிவில்லாத மக்களே...


Kannan Ethiraj
டிச 16, 2025 08:34

ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக கருத்துதெரிவிக்க கூட உரிமை இல்லை என்பதை இது காட்டுகிறது


Gajageswari
டிச 16, 2025 05:24

வாழ்த்துக்கள். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்


Kasimani Baskaran
டிச 16, 2025 04:09

குறிப்பிட்ட ஜாதி வெறுப்பில் இயங்கும் தீம்க்காவுக்கு அரசியலமைப்புச்சட்டத்தில் நம்பிக்கை இல்லை. இந்தியாவின் பெரும்பான்மை மதத்தின் மீது அதீத வெறுப்பு உண்டு. நாடகம் மூலம் பல பிரிவினர்களை ஏமாற்றி ஒட்டு வாங்கி அதே தவறை திரும்ப செய்வார்கள். பல வழக்குகளுக்குப்பின் சந்தானத்தை வேரறுப்போம் என்று பேச்சு வருவதில்லை - சமூக ஊடகங்களில் அது உண்டு.


vaiko
டிச 15, 2025 22:17

போராட்டம் அங்கிகரிக்க பட வேண்டுமா? யாரால்?


G Mahalingam
டிச 15, 2025 21:58

இதே திராவிட மாடல் ஆட்சி ஒரு யூடூபர் வழக்கறிஞர், முந்தைய காவல்துறை அதிகாரி - நீதிபதியை இழிவான பேசியதாக கைது செய்து சிறையில் அடைந்தாரகள். . போன மாதம் நடந்தது. இதை உச்சநீதிமன்றம் விசாரணை போது கேட்க வேண்டும். சட்டம் கைது எல்லாம் திமுக ஆதரவாளருக்கு கிடையாது ஆனால் திமுகவை எதிர்த்தால் கைது. என்னடா அராஜக ஆட்சி. திமுக மீது போலீஸ் வழக்கு போட்டால் கண்டிப்பாக திமுகவினரும் அவர்கள் மீது புகார் கொடுப்பார்கள். இந்த வழக்கு யானைக்கும் பானைக்குள் சரி என்று போய் விடும்


SIVA
டிச 15, 2025 21:55

மீண்டும் ஒரு முறை எமர்ஜெண்சி தமிழகத்திற்கு மட்டும் வர வேண்டும் .....


Senthil Kumar
டிச 15, 2025 23:03

எமெர்ஜென்சி எல்லாம் வேண்டாங்க, அடுத்த எலக்ஷன் போதுங்க இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்


T.Senthilsigamani
டிச 16, 2025 08:06

அன்பரே இபோது நடப்பது கூட சொல்லப்படாத எமர்ஜென்சி ஆட்சி தான். பள்ளி மாணவர்கள் அடித்து பள்ளி மாணவன் கொடூர கொலை. ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியது, ஜவஹர் நவோதயா பள்ளிகள் திறக்க உச்ச நீதி மன்ற உத்தரவு, கேரள உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர் பெற்ற ஒற்றை இலக்க ஓட்டுக்கள், அமைச்சர் நேரு மீதான அமலாக்க துறை புகார் என அனைத்து செய்திகளையும் அடக்கி வாசிக்கும் திராவிட சார்பு ஊடகங்கள் தான் சாட்சி .


Ramesh Sargam
டிச 15, 2025 20:46

ஒரு நேர்மையான நீதிபதிக்கு பிரச்சினை. இன்னேரம் உச்சநீதிமன்றமே அவர் விஷயத்தில் தானாகவே தலையிட்டு, அவரை எதிர்க்கும் திமுகவினரை கடுமையாக எச்சரித்திருக்க வேண்டும். ஏன் தமிழக முதல்வரின் கட்டளையால்தான் அவர்கள் அப்படி செய்கிறார்கள். ஆகையால், தமிழக முதல்வரையும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் சட்டத்தில் இடம் இல்லை. அப்படி என்றால் சட்டத்தை திருத்துங்கள்.


Indian
டிச 16, 2025 03:39

உன் கருத்து சரியல்ல . உன் வார்த்தைகளை கட்டுப்படுத்து . பொது வெளியில் எழுதும் போது கவனமாக எழுது .


vivek
டிச 16, 2025 07:27

கோவம் வருது......


Rajut Raja
டிச 17, 2025 15:34

தமிழில் வாசிப்பது அழகாக இருந்தது தினமலர் செய்தி சேனலுக்கு வாழ்த்துக்கள்


புதிய வீடியோ