உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷோபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு மேலிடத்துக்கு தொண்டர்கள் கடிதம்

ஷோபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு மேலிடத்துக்கு தொண்டர்கள் கடிதம்

சிக்கமகளூரு: மத்திய விவசாய நலத்துறை இணை அமைச்சர் ஷோபாவுக்கு, 'சீட்' தர பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.லோக்சபா தேர்தல் நெருங்குவதால், சீட்டுக்கு துண்டு போடுவது சூடுபிடித்துள்ளது. தற்போதைய எம்.பி.,க்களில் சிலர், சீட் உறுதி செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சிக்கமகளூரு எம்.பி.,யும், மத்திய இணை அமைச்சருமான ஷோபாவும் விதிவிலக்கல்ல.ஆனால் அவருக்கு எதிராக தொண்டர்கள் திரும்பி இருக்கின்றனர். அவருக்கு இம்முறை சீட் தரக்கூடாது என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இரண்டு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டும், மத்திய அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களையும் அவர் செயல்படுத்தவில்லை. எனவே அவருக்கு பதிலாக, வேறு தலைவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.இதுதொடர்பான, கடிதப் போராட்டத்தை தொண்டர்கள் துவக்கியுள்ளனர். ஷோபாவுக்கு சீட் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் 5,000 தொண்டர்களிடம் கடிதம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு அனுப்ப தயாராகின்றனர். இதனால், ஷோபா அதிர்ச்சியில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி